90 கிட்ஸ் பெண்களின் ஆண்டு விழா பாடலாக இருந்த ‘உலக அழகி’ பாடல் புகழ் நடிகை – இப்போ எப்படி இருக்கார் பாருங்க ?

0
14039
karthika
- Advertisement -

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘தூத்துக்குடி’ சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘கறுவாபையா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட் அடைந்தது. மேலும், கார்த்திகா நடித்த ‘பிறப்பு’ படத்தில் இடம்பெற்ற உலக அழகி நான் தான் என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அதிலும் அந்த படத்தில் அவர் ஆடிப்பாடிய, ‘உலக அழகி நான் தான்’ பாடல், அந்த சமயத்தில் பள்ளிக்குழந்தைகளின் மேடை நடனத்துக்கான பொருத்தமான பாடலாக அமைந்தது. 

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-158-1024x575.jpg

1991 ஆம் ஆண்டு திருக்கடையூர் என்ற ஊரில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் அதன் பின்னர் ஆடிஷன் மூலம் இவருக்கு தூத்துக்குடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தூத்துக்குடிபடத்திற்கு பின்னர், பிறப்பு, நாளைய பொழுது உன்னோடு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.தமிழில் பல்வேறு படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இறுதியாக தமிழில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘இவர் பட்டாளம் ‘என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறார் கார்த்திகா. இதுகுறித்து பேசியுள்ள அவர், தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய தங்கையின் படிப்பிற்காக திடீரென்று மும்பை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது அப்போது கூட சில படங்களில் வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க முடியாத நிலையில் இருந்தேன் இடைப்பட்ட காலத்தில் சென்னை வந்தபோது என்னை வெளியில் பார்த்த பலரும் நீங்கள் ஏன் மீண்டும் நடிக்க கூடாது என்று பல இடத்தில் கேட்டார்கள்.

This image has an empty alt attribute; its file name is 2-44-1024x588.jpg

என்னுடைய உறவினர்கள் கூட உன்னை எத்தனை பேர் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள் அதற்காகவாவது நீ மீண்டும் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தசமயத்தில் தான் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. இதுதான் சரியான தருணம் என அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. அதில் ஒப்பந்தமான நேரம், அந்தப்படங்கள் மூலமாக இன்னும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. அதேபோல இங்கே தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இனி வெள்ளித்திரையில் என்னை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ளார் கார்த்திகா.

-விளம்பரம்-
Advertisement