ரஜினியை கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ், பைக் திருட்டு வழக்கில் கைது. குஷியில் ரஜினி ரசிகர்கள்.

0
1716
santhosh
- Advertisement -

கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பயங்கரமான போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பாட்டனர். இந்த போராட்டத்தின் போது பல பேர் படுகாயம் அடைந்து இருந்தார்கள். அவர்களை எல்லோரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார்கள். இந்நிலையில் போராட்டத்தில் பாதிக்கபட்ட மக்களை ரஜினி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வந்து உள்ளார். அப்போது இந்த ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டு படுகாயம் அடைந்த இளைஞன் சந்தோஷ் ராஜ் ரஜினியை பார்த்து யார் நீங்கள் ? என்று கேட்டு அதற்கு ரஜினி பதில் கூற முடியாமல் அங்கிருந்து கிளம்பி இருந்தார்.

-விளம்பரம்-
 இந்த விளம்பரத்தை பார்த்த ஸ்டெர்லைட் போராளி சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் மணி ஆகிய இருவர் ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கை, திருட்டு பைக் எனத் தெரிந்து ஆர்.சி புக் இல்லாமல் வெறும் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.

- Advertisement -

அப்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் ஸ்டெர்லைட் போராளி சந்தோஷ் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஷியாம் குமார். இவர் தனது எமஹா ஆர்.ஒன் 5 என்ற பைக்கை தன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை தூத்துக்குடியை சேர்ந்த சரவணன், விஜி என்ற இரண்டு திருடர்கள் பைக்கை திருடி சென்று உள்ளார்கள். பின் அந்த பைக்கை விற்பனைக்காக இருப்பதாக OLX விளம்பரத்தில் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த ஸ்டெர்லைட் போராளி சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் மணி ஆகிய இருவரும் OLX விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கை ஆர்சி புக் இல்லாமல், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வெறும் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதனிடையே பைக்கை பறிகொடுத்த சாம் குமாரும் இந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

-விளம்பரம்-
 இதனிடையே  பைக்கை பறிகொடுத்த சாம்குமாரும் இந்த OLX விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது திருடர்கள் பைக் விற்பனை ஆகி விட்டது என்று தெரிவித்துள்ளார்கள். பின் சாம் குமார் நான் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறி பைக் வாங்கியவரின் விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். பைக் சந்தோஷ் இடம் இருப்பதை உறுதி செய்த பிறகு சாய்குமார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சந்தோஷ்,மணி,சரவணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். விஜியை மட்டும் தேடி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் நான்தாப்பா பைக் திருடன் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. ரஜினியை யார் என்று கேட்ட நபர் தற்போது இப்படி ஒரு வழக்கில் கைது செய்யபட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளார்கள்.

Advertisement