அமலா ஷாஜியின் பேச்சைக் கேட்டு ஃபாலோவர் ஒருவர் லட்சக்கணக்கில் ஏமாந்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் மீடியாவில் தற்போது 2K கிட்ஸ்களின் பேவரட்டாக திகழ்பவர் அமலா ஷாஜி. இவர் பிரபல நடிகைகளை விட சோசியல் மீடியாவில் அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார். தற்போது இவரை 4 மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் பாலோ செய்கிறார்கள். இவருடைய ஆட்டம், பாட்டம் என தரமான கன்டென்ட்களை உருவாக்கி தருகிறார். மேலும், இவர் தன்னுடைய சகோதரி உடன் சேர்ந்து செய்யும் ரில்ஸ், சோலோ டான்ஸ், ரீகிரியேஷன், அம்மா அப்பாவுடன் ஃபேமிலி ரில்ஸ், பண்டிகைகளில் புதிய ஆடைகள், கடை விளம்பரம் பண்டிகைகளில் புது புது கான்சப்ட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் அமலா ஷாஜி டிரேடிங் கம்பெனி ஒன்றை ப்ரோமோஷன் செய்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர், வீட்டில் இருந்தபடியே 20 முதல் 30000 வரை சம்பாதிக்க வேண்டுமா? என்னுடைய தோழி அனன்யா போரெக்ஸுக்கு மெசேஜ் செய்யுங்கள். அவரிடம் நான் முதலீடு செய்து நிறைய லாபம் பெற்றேன். அது 100% உண்மை, நண்பகத்தன்மையானது. இந்த டிரேடிங் கம்பெனியை உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி அமலா ஷாஜி வீடியோவை பார்த்த அவருடைய பாலோவர் ஒருவர் நிஜமாகவே அந்த கம்பெனிக்கு முதலில் ஆயிரம் ரூபாய் அனுப்பி இருந்தார்.

Advertisement

டிரேடிங் கம்பெனி ப்ரோமோஷன் வீடியோ:

அடுத்த சில நிமிடங்களில் அந்த பணம் 12, 999 ரூபாயாக மாறியது என்று அனன்யா சொல்லி இருக்கிறார். அந்த நபரும் சந்தோசப்பட்டு அனன்யா சொல்வதை கேட்டு இருக்கிறார். பின் அந்த பணத்தை எடுக்க 8,999 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் ஆக அனுப்ப வேண்டும் என்று அனன்யா சொன்னவுடன் அந்த நபர் அனுப்பி இருக்கிறார். பின் சிறிய டெக்னிக் பிரச்சனை இருக்கிறது. உங்களுடைய தொகை தற்போது ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது. இதை நீங்கள் எடுக்க வேண்டும் என்றால் 18, 999 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று அனன்யா சொல்லி இருக்கிறார்.

பாலோவர் செய்தது:

அந்த நபரும் ஒரு லட்சத்திற்கு ஆசைப்பட்டு அனன்யா கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்திருக்கிறார். இதற்காக ஜிஎஸ்டி தொகை 31 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று நோட்டிபிகேஷன் வந்திருக்கிறது என்று அனன்யா சொல்லி இருக்கிறார். மீண்டும் அந்த நபர் அனன்யா கேட்க கேட்க பணம் அனுப்பி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர் தன்னுடைய பணத்தை திரும்பி கேட்டு இருக்கிறார். அதற்கு அனன்யா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. மாத கணக்கில் அனன்யா தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

Advertisement

மோசடி செய்த அனன்யா:

இதனால் அந்த நபர் கோபப்பட்டு அனன்யாவிடம் கேட்டு இருக்கிறார். உடனே அனன்யா அந்த இன்ஸ்டா பக்கத்தை க்ளோஸ் செய்து விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார். அதற்குப் பின்னால் தான் ஏமாந்திருப்பதை அந்த நபர் உணர்ந்து இருக்கிறார். பின் இவர் அமலா ஷாஜியை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இதற்கு எந்தவித ரிப்ளையும் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார். இதை அடுத்து அந்த நபர் சோசியல் மீடியாவில் மோசடி நடப்பதை ஆதாரத்துடன் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். இதனால் தனக்கு பிரச்சினை வந்து விடும் என்று அமலா ஷாஜி, என்னுடைய விளம்பரங்களில் சொல்லும் கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல.

Advertisement

அமலா ஷாஜி கொடுத்த பதில்:

அதன் உண்மை தன்மையை விசாரித்து சொந்த அபாயத்துக்கு உட்பட்டு நீங்கள் முதலீடு செய்யுங்கள் என்று திமிராக பொறுப்பில்லாமல் பதில் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமலா ஷாஜியின் பாலாவேர்ஸ் அவருக்கு எதிராகவே சோசியல் மீடியாவில் குரல் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அமலா ஷாஜியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் இருக்கின்றார்கள். இந்த பிரச்சனை குறித்து முன்னாள் டிஜிபி ரவி, அமலா ஷாஜி ஒரு விக்டிம் தான். அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இது போன்ற சைபர் கிரைம் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement