‘அவர சுட்டு கொன்றது மாதிரி கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள்’ – சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

0
343
salman
- Advertisement -

பாடகர் சித்து மூஸ் வாலா போன்று கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள் என்று சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலா. இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு பெயர் போனவை. அதிலும் 2019ஆம் ஆண்டு வெளியான அவரது பாடலான ‘ஜட்டி ஜியோனே மோர் தி பண்டூக் வார்கி’ என்ற பாடல் 18ஆம் நூற்றாண்டைச் சேந்த சீக்கிய போர் வீரர் மாய் பாகோவை மோசமாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவர் அதற்காக மன்னிப்பு கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-

பின் கடந்த மாதம் பலி ஆடு என்ற பாடலை இவர் பாடி இருந்தார்.அதில் ஆம் ஆத்மி கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து துரோகி என்று கூறியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் துப்பாக்கி கலாசாரம், கேங் கலாசாரம் உள்ளிட்டவற்றை புகழந்து பாடுகிறார் என்று சித்து மூஸ் வாலா ஏற்கனவே பல சர்ச்சையில் சிக்கி இருந்தார். பாடல்கள் மூலம் வன்முறையை தூண்டுவதாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர் பாடகர் மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார்.

- Advertisement -

சித்து மூஸ் வாலா கொலை:

இப்படி சித்து பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த சித்து மூஸ் வாலா சமீபத்தில் மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு இருந்தனர். இதில் அவருடன் இருந்த இரண்டு பேரும் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்து இருந்தார்கள். பின் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சித்து மூஸ் வாலா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி:

மேலும், இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக டெல்லி திகார் சிறையிலிருக்கும் லாரென்ஸ் பிஷ்னாய் சேர்க்கப்பட்டிருக்கிறார். பாடகர் சித்து மூஸ் வாலா கொலை செய்யப்பட்ட பின்னர் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள லாரன்ஸ் பிஷ்னாயின் குழு பக்கத்தில் இந்த கொலை கூட்டாளி விக்கியின் கொலைக்கு பதிலடி என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சித்து மூஸ் வாலா போன்று கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள் என்று சல்மான் கானுக்கு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்:

சல்மான் கான் கடந்த 2006ஆம் ஆண்டு அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வகை மான்களை பிஷ்னாய் சமூகத்தினர் புனிதமாக கருதுகின்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த லாரன்ஸ் பிஷ்னாய் இந்த மானை கொன்றதற்காக சல்மான் கானை கொன்றுவிடுவோம் எனக் கூறியிருந்தார். இந்த சமயம் பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொடூர கொலை பல வருடங்களுக்கு இந்த மிரட்டல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் சல்மான் கானுக்கும், அவரது தந்தை சலீம் கானுக்கும் உண்மையிலேயே கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதுஎன்னவென்றால்,

Salman Khan Wipes Sweat With Sonam Kapoor's Dupatta

போலீஸ் தீவிர விசாரணை:

நேற்று சல்மான் கான் தந்தை சலீம் கான் பாந்தரா கடற்கரையில் தனது வழக்கமான நடை பயணத்திற்கு சென்று அங்கு உள்ள பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். அப்போது அவர் அருகில் இருந்த கடிதத்தை எடுத்து படித்திருக்கிறார். அதில் சல்மான்கான், சலீம் கான் ஆகிய இருவரும் பாடகர் சித்து மூஸ் வாலா போன்று கொடூரமாக கொல்லப்படுவீர்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதன் பிறகு வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து சல்மான் கான் வசிக்கும் இடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement