துப்பாக்கி வில்லனின் மாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த தனுஷ் பட நடிகர் தான் – இன்று அவரின் பரிதாப நிலை.

0
7565
abhi

தமிழ் சினிமாவில் எத்தனையோ பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடித்து உள்ளனர். அந்த வகையில் தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால். இவர் மார்ஷல் ஆர்ட்ஸ்ஸை கற்றுத் தேர்ந்தவர். 2011 ஆம் ஆண்டு வெளியான ‘சக்தி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவரது ஸ்டண்ட் காட்சிகள் பெரிதும் பேசப்பட பின்னர் இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2 ‘ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். பில்லா 2 படத்திற்கு பின்னர் விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி ‘படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படத்தில் இவரது ஸ்டண்ட் காட்சிக்கு இணையாக இவரது குரலுக்கும் ஒரு தனி மாஸ் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

அதுவும் குறிப்பாக துப்பாக்கி படத்தின் இடைவேலையில் இவருக்கும் விஜய்க்கும் இடையிலான ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்று வசனம் மாபெரும் ஹிட் அடைந்தது. பில்லா துப்பாக்கி படத்திற்கு பின் இவர் சூர்யா நடித்த ‘அஞ்சான் ‘ படத்திலும் நடித்து இருந்தார். இவர் நடித்த தமிழ் படங்களுக்கு எல்லாம் இவருக்கு டப்பிங் கொடுத்தது வேறு யாரும் இல்லை துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அபிநய் தான்.

துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் பல்வேரு படங்களில் நடித்துள்ளார்.மேலும், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்த உள்ளார், ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் இவர் பல்வேறு விளம்பரங்களில் கூட நடித்தார். அதே போல டப்பிங் ஆர்ட்டிஸ்டாக கூட பணியாற்றி வந்த இவர் தான் வித்யூத் ஜமாலுக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது. தற்போது வாய்ப்புகள் இல்லாமல் பரிதாப நிலையில் தள்ளப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement