துணிவு படத்தை கண்டு தணிக்கை குழு ஆட்சேபம் – படத்தில் மொத்தம் இத்தனை சீனில் கட்.

0
450
- Advertisement -

அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இருந்து சில காட்சிகளை சென்சார் குழுவினர் நீக்கியுள்ளதாக தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு நடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த “வாரிசு” படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது துணிவு படத்தில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து நடித்துள்ளார் என்ற தகவல சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

துணிவு ட்ரைலர் :

மேலும் இப்படத்தின் “சில்லா சில்லா” பாடலும் “காசேதான் கடவுளடா” என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் புத்தாண்டின் போது துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனாலும் இப்படத்தில் வரும் காட்சிகள் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை போல இருக்கிறது எனவும், படத்தின் சில காட்சிகளில் அஜித்திற்கு பதிலாக வேறொருவர் நடித்திருக்கிறார் எனவும் விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

இருந்தாலும் துணிவு படத்தில் ட்ரைலர் நல்ல விமர்சங்ககளையும் ஒரு பக்கம் பெற்று வருகிறது. ட்ரைலரை பார்க்கும் போது இது ஒரு வங்கியை கொள்ளை அடிக்கும் கதை என்பதை தெளிவாக காண முடிகிறது. அதோடு இப்படத்தில் வரும் சில காட்சிகளில் கடலில் துரத்துவது போன்ற காட்சிகளும், சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றனர். அதோடு சில கொச்சை வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கின்ற்றன. ட்ரைலர் மற்றும் “காசேதான் கடவுளடா” பாடல்களிலும் அந்த சில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.

-விளம்பரம்-

நீக்கப்பட்ட காட்சிகள் :

துணிவு படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் படத்தை சென்சார் குழுவினர் பார்த்துள்ளனர். அந்த வகையில் படத்தில் இருந்து சில சர்ச்சை ஏற்படுத்தும் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக கொச்சை வார்த்தைகள் வரும் இடங்களில் அவை தெரியாத அளவிற்கு பீப் சப்தம் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் துணிவு படத்தில் மொத்தம் 17 காட்சிகளில் இந்த பீப் சப்தம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

யூஏ சான்றிதழ் :

அதோடு காசேதான் கடவுளடா பாடலின் சில வரிகளை நீக்கியும் பீப் செய்தும் கூட அஜித் நடித்திருக்கும் இந்த துணிவு படத்திற்கு சென்சார் குழு “யூ/ஏ” தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில தினங்களில் விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒன்றாக வெளியாகும் நிலையில் இரு பட ரசிகர்களுக்கு மத்தியில் எந்த படம் பொங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எடுத்துள்ளது.

Advertisement