துணிவா ? வாரிசா ? பொங்கல் வின்னர் அஜித்தா? விஜய்யா? சார்பில்லாத சரியான விமர்சனம் இதோ

0
896
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வந்ததற்கு காரணம் “துணிவு” மற்றும் “வாரிசு” படங்கள். இந்த நிலையில் “வாரிசு” மற்றும் “துணிவு” இன்று திரையரங்குகளில் வெளியாகியது. இதனால் எல்லோரும் எதிர்பார்த்த படியே திரையரங்குகள் களைகாட்டியது. பல கொண்டாட்டங்களும் பல அசம்பாவிதங்களும் ஏற்றப்பட்டு வரும் நிலையில், இந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடும் துணிவு மற்றும் வாரிசு படத்தில் எது இந்த பொங்கலை கொண்டாட போகிறது? என்பதை இந்த சார்பில்லாத விமர்சனத்தில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-
varisuthunivu

வாரிசு கதைக்களம் :

வாரிசு படத்தை பொறுத்தவரை தொழிலதிபரான சரத்குமாருக்கு ஸ்ரீகாந்த், ஷான், விஜய் என மூன்று மகன்கள். இதில் மூத்த மகன்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் குடும்ப தொழிலை பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் இளையவரான விஜய் சரத்குமாரின் விருப்பத்திற்கு மாறாக செயல்வடுவதினால் மனக்கசப்பால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதற்க்கு பின்னர் விஜய் 7 வருடங்கள் தன்னை சமூகத்தில் அடையாள படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது குடும்பத்தில் குழப்பம், தொழிலில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரும் விஜய் இந்த பிரச்னைகளை சரி சரிசெய்து சரத்குமாரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார் என்பதுதான் கதை.

- Advertisement -

துணிவு கதைக்களம் :

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை பொறுத்தவரை, வாங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு வங்கிகளில் பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு, மியூச்சுவல் பண்ட்ஸ் போன்ற பெயரில் மக்கள் எப்படியெல்லாம் வங்கிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும், தனியார் வங்கிகளில் உள்ள கட்டண கொள்ளை குறித்ததும் இந்த படத்தில் தெளிவாக கூறியிருக்கின்றார் இயக்குனர் வினோத். இந்தியாவில் உள்ள Your Bank வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் அதனை ஏன் செய்கிறார்? எதற்காக செய்கிறார்? என்பதை கதையின் வழியாக கூறியிருக்கிறார் இயக்குனர் வினோத்.

வாரிசு விமர்சனம் :

வாரிசு படத்தை பொறுத்தவரை பல காலமாக ஆக்சன், விவசாயம், அரசியல் போன்ற சமூக பிரச்னைகளை மையமாக கொண்ட படத்தில் நடித்து வந்த விஜய் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய குடும்ப கதைக்கே திரும்பியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்சசியடைந்துள்ளார். அதோடு விஜய் தொடக்க காலத்தில் அப்பா செண்டிமெண்ட், தங்கச்சி சென்டிமென்ட இருக்கும் படங்களில் நடித்துதான் பிரபலமானார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் மீண்டும் குடும்ப சென்டிமென்டில் உருவாகியுள்ளது இப்படம். படத்தின் பல காட்சிகளில் விஜய் ரசிகர்களின் கைத்தட்டல்களை பெறுகிறார். அதோடு குடும்ப சென்டிமென்ட காட்சிகளில் எதிர்பார்த்த அளவிற்கு நடித்திருக்கிறார் விஜய்.

-விளம்பரம்-

குறைகள் என்று பார்த்தால் படத்தில் காட்சி நேரத்தை சொல்லலாம், அதோடு படத்தில் அதிக கதாபாத்திரங்கள் இருந்தும் அவர்களின் அறிமுகம் சரியாக இல்லை. வாரிசு படத்தின் “ரஞ்சிதமே” பாடல் வெளியான போது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அப்பாடலை படத்தில் சரியான இடத்தில் வைக்காதது குறையாக இருக்கிறது. மேலும் படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெளிவாக காண முடிகிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும் படம் பொங்கலுக்கு ஏற்ற குடும்ப சென்டிமெண்ட்டாக உருவாக்கி இருக்கிறது.

துணிவு விமர்சனம் :

அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தை பொறுத்தவரையில் சுவாரசியமான காட்சிகளுடன் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. அஜித் தன்னுடைய தனித்தன்மையான உடல் மொழியால் ரசிகர்களை ஈர்க்கிறார். மேலும் அவரின் வசனங்கள் மிகவும் அற்புதமாகவும், சில சர்ச்சையான விஷியங்களை போற போக்கில் காமெடியாக சொல்லி இருக்கிறார். மேலும் இப்படத்தில் இதுவரை யாரும் பார்த்திடாத அஜித் குமாரை ரசிகர்களின் முன்னல் நிற்க வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத்.

படத்தில் குறைகள் என்று பாரத்தால் அதிக லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. கிளைமாக்ஸ் முடிக்க வேண்டும் என்று முடித்தார் போல இருந்தது அதனை இன்னும் கூட நன்றாக கொண்டு வந்திருக்கலாம், அதோடு அதன் நீளமும் அதிகமாக இருக்கும் படியாகத்தான் தோன்றியது. படத்தில் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் அதனை ட்விஸ்ட் காட்சிகளின் மூலம் சரிப்படுத்தி இருக்கிறார் வினோத். பின்னணி இசை ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.

எந்த படத்திற்கு வெற்றி :

இப்படி இரண்டு படங்களை வைத்து பார்க்கையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களுடைய பாணியில் சரியாக நடித்திருக்கிறனர். படமும் அப்படிதான் அமைத்துள்ளது. இந்த பொங்கலுக்கு இரண்டு படங்களுமே வெற்றி படங்கள்தான். அதோடு நல்ல வசூலை எதிர்பார்க்கலாம். ஆனால் திரைப்பட விமர்சன ரீதியாக பார்த்தல் வாரிசு படம் ரசிகர்கள் எதிர்பார்த்த கதையாகத்தான் அமைந்துள்ளது. அந்த வகையில் சமூக கருத்து மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் விஜய்யின் “வாரிசு” படத்தை முந்தி இருக்கிறது அஜித்தின் துணிவு.

Advertisement