தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. மேலும், விஜய் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் தோன்றினாலே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் துப்பாக்கி படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அக்ஷரா கவுடா. இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் முதன் முறையாக இணைந்த துப்பாக்கி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
https://www.instagram.com/p/B2RLB8wJCvc/
விஜய், காஜல் அகர்வால், ஜெய்ராம், வித்யூத் ஜமால் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்த இந்த படம் நடிகர் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. பெங்களூரை பூர்விகமாகக் கொண்ட மாடல் அழகியான இவர் தமிழில் 2011ம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் துப்பாக்கி படத்தில் இவர் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இரும்பு குதிரை, போகன் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : அதிகரிக்கும் வசூல், அதிகரிக்கும் காட்சிகள், பிகில் வசூலுக்கு விலங்கு போட்ட கைதி.
தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார் நடிகை அக்ஷரா கவுடா இறுதியாக 2017 ஆம் ஆண்டுசந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மாயவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்குடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யான செய்தி என்று கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா.
https://www.instagram.com/p/B3UN5PgpkPw/
https://www.instagram.com/p/B3OqT8LJm2M/
தற்போது கன்னடத்தில் பஞ்சதந்திர என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது என்னவோ துப்பாக்கி படம் தான். அந்த படத்தில் ஜெயராம், விஜய்க்கு பெண் பார்க்கும் போது அந்த காட்சியில் விஜய்யை சந்திக்க ஒரு ஹோட்டலுக்கு வருவார் அக்ஷரா. அப்போது காஜல் அகர்வால் 'இவளை நான் ஆபாச இணையதளத்தில் பார்த்துள்ளேன் என்று கூறி இருப்பார். அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
https://www.instagram.com/p/Bt27i2Dl9Ix/
ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அக்ஷரா. அதன் பின்னர் துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். இவரால் தமிழில் ஒரு நிலையான நடிகையாக இருக்க முடியவில்லை. இதனால் தற்போது அக்ஷரா, கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது கன்னடத்தில் திருவிக்ரமா என்ற படத்தில் வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். துப்பாக்கி படத்தில் ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷரா மாடல் அழகி என்பதால் படு கவர்ச்சியாக போஸ்களை அள்ளி வீசி வருகிறார்.
இவரது சமூக வலைத்தளம் முழுக்க கவர்ச்சி புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகிறது. இதனால் படத்தில் தான் அப்படி என்று பார்த்தால் நிஜத்திலும் படு கவர்ச்சியான பேர்வழியாக இருக்கிறார் அக்ஷரா. சமீபத்தில் இவரது கவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அதில் ஒரு சில புகைப்படங்கள்.





