அதிகரிக்கும் வசூல், அதிகரிக்கும் காட்சிகள், பிகில் வசூலுக்கு விலங்கு போட்ட கைதி.

0
38125
bigil-kaithi
- Advertisement -

பண்டிகை நாட்கள் என்றாலே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதற்கு போட்டியாக மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும் தயங்குவார்கள், ஆனால், சமீபகாலமாக இந்த கூற்றினை தமிழ் சினிமா முறியடித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சூப்பர் ஸ்டார் பேட்ட திரைப்படம் அல்டிமேட் ஸ்டார் அஜித் விசுவாசம் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி அடைந்து பல்வேறு வசூல் சாதனையும் செய்திருந்தது.

-விளம்பரம்-
Image

பேட்ட மற்றும் விசுவாசம் படத்தை தொடர்ந்து தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகியுள்ளது. அது விஜயின் பிகில் திரைப்படம் மற்றும் கார்த்தியின் கைதி திரைப்படம் தான். பிகில் திரைப்படத்திற்கு எதிராக கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியான போது பலரும் கைதி திரைப்படத்தை கிண்டல் செய்தார்கள். விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்திற்கு போட்டியாக வெளியாகும் படம் எப்படி வெற்றிபெறும் என்ற கேள்வியும் பலரது மனதில் எழுந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் மற்றும் கைதி திரைப்படம் இரண்டும் வெளியாகியிருந்தது. இதில் பிகில் திரைப்படத்தை விட கார்த்தியின் கைதி திரைப்படம் மிகவும் குறைவான திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : நான் எடுக்கும் படங்கள் எல்லாம் காப்பியா ? முதன் முறையாக மனம்திறந்த அட்லீ.

- Advertisement -

அதிலும் கைதி குறைந்தபட்ச திரையில் மட்டும் தான் கைது திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் பிகில் திரைப்படத்தை விட கார்த்தியின் கை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் இரண்டு படங்களை ஒப்பிடும்போது கார்த்திக்கை கைதி திரைப்படம்தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் விஜய்யின் பிகில் திரைப்படம் 200 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், வசூல் சதவீதத்தை வைத்து பார்க்கும் போது பிகில் திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால், கைதி திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கைதி திரைப்படத்திற்கு மக்களின் ஆதரவை அறிந்த திரையரங்க உரிமையாளர்கள் பிகில் திரைப்படத்தின் காட்சிகளை குறைத்துவிட்டு கைதி படத்தின் காட்சிகளை அதிகரித்துள்ளனர். பிகில் திரைப்படத்தின் பட்ஜெட் 180 கோடி ஆனால், கார்த்தியின் கைதி திரைப்படத்தின் பட்ஜெட் 30 கோடி மட்டும் தான் ஆனால், அதற்குள்ளாகவே 51 கோடி வசூல் செய்துவிட்டது. எனவே, கைதி திரைப்படம் பட்ஜெட்டைவிட அதிக வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. எனவே, லாப ரீதியாக பார்த்தால் பிகில் படத்தைவிட கைது படம்தான் வெற்றி கண்டுள்ளது.

-விளம்பரம்-

இதனால் பிகில் திரைப்படம் கார்த்தியின் கைதி திரைப்படத்திடம் மண்ணை கவ்வியுள்ளது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. கார்த்தியின் படத்துடன் விஜயின் படம் மண்ணை கவ்வுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல ஏற்கனவே விஜயின் காவலன் படம் வெளியான போது அதே சமயத்தில் கார்த்தியின் சிறுத்தை படம் வெளியாகி இருந்தது அந்த சமயத்தில் காவலன் படத்தை விட சிறுத்தை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement