துப்பாக்கி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகையா இது. வைரலாகும் புகைப்படம்.

0
65639
sanjana

2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் துப்பாக்கி திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இப்படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், வித்யூத் ஜம்வால், சத்யன், மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். ஏ ஆர் முருகதாஸும், விஜய்யும் இணைப்பில் வெளிவந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து இருந்தார்கள்.

இந்த படத்தை பல முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத அளவிற்கு இருந்தது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற 12 கன் சூட் அவுட், ஐ அம் வெயிட்டிங், கிளைமாக்ஸ் காட்சிகள் என்று பல காட்சிகள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.படத்தில் விஜய்க்கு இரு தங்கைகளில் ஒருவராக நடித்தவரின் பெயர் தான் சஞ்சனா சாரதி.அந்த படத்திற்கு பிறகு சிம்பு நடித்த வாலு படத்திலும் தங்கையாக நடித்திருப்பார்.

- Advertisement -

மேலும், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை என்ற படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் படங்களில் ஹீரோயினாகவும் நடிப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.சென்னையில் பிறந்த சஞ்சனா சாரதி படித்தது எல்லாமே சென்னையில் தான் படிப்பை முடித்த பின்னர் ஹாங்காங்கில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் ஃபிங்கர் ட்ப் என்ற வெப் சீரிஸ்ல் கூட நடித்திருக்கிறார் இறுதியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement