லண்டனில் துவங்கியது துப்பறிவாளன் 2. விஷாலுக்கு இந்த படத்தில் ஜோடி யார் தெரியுமா ?

0
1831
Thuparivalan

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை எடுக்கும் இயக்குனர்கள் மிகவும் குறைவே. அப்படி எடுப்பதில் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கியமான இயக்குனர். இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, பிசாசு,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் தரமான படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. அப்படி இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய் என்று மல்டி ஸ்டார்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஷால் ஓரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஸ்கின் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் ஏற்கனவே ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் முதல் பாகத்திற்கு மாறாக படு தோல்வி அடைந்தது.

இதையும் பாருங்க : தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்ட ராஸ்மிகா மந்தனா. குவியும் லைக்ஸ்.

- Advertisement -

இந்த நிலையில் துப்பறிவாளன் படத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட் தேடும் பணியில் இயக்குனர் மிஸ்கின் இறங்கி விட்டதாக சில தகவல்கள் வெளியானது. அதற்கு ஆதாரமாக மிஸ்கின் பிரபல அருங்காட்சியம் ஒன்றில் இருக்கும் சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. அதனை துப்பறிவாளன் முதல் பாகத்தில் நடித்திருந்த. நடிகர் பிரசன்னாவும் தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Image

இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் இன்று (நவம்பர் 4) லண்டனில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் அறிமுக நடிகை ஆஷ்யா என்பவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் 40 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கும் மிஷ்கினின் அபிமான இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தினை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்க இருக்கிறார். துப்பறியாளன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான். எனவே, இந்த படத்தின் இரண்டாம் பாகமாவது வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து காணலாம். மேலும், மிஸ்கின் எடுக்கும் முதல் இரண்டாம் பாக திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement