தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேறி உள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.

மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். எனவே, சிவகார்த்திகேயன் அறிமுகமானது 3 படத்தில் தான் என்றும் சிலர் கூறுவதும் உண்டு. அட அவ்வளவு எங்க நம்ம தல நடித்த ஏகன் படத்தில் கூட சிவகார்த்திகேயன் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். ஆனால், ஹீரோவாக அறிமுகமாகி இருக்க வேண்டியது என்னவோ குறள் 786 என்ற பதில் மூலம் தான் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.

Advertisement

இந்த படத்தை இயக்கியது வேறு யாரும் இல்லை நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தான். மீபத்தில் ரசிகை ஒருவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் குறள் 786 குறும்படத்தை ஏன் இன்னும் ரிலீஸ் பண்ண வில்லை? எப்போது ரிலீஸ் செய்வீர்கள்? என்று கேட்டு ட்விட்டரில் கேள்வியெழுப்பினார். அந்த ட்வீட்டை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது, அது குறும்படம் இல்ல. அது சிவகார்த்திகேயனுடன் நான் இயக்குனராக அறிமுகமாக வேண்டிய படம்.

நான் தான் அவரை ஹீரோவாக சினிமா உலகில் அறிமுகம் செய்ய வைப்பதாக இருந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. அதற்கு பிறகு தான் அவர் மெரினா படத்தில் நடித்தார். குறள் 786 படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் அபிநயா தான் ஹீரோயினியாக நடிக்க இருந்தது. நான் அவருடன் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் குறள் 786 படம் பண்ணுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

Advertisement

அதே போல மற்றொரு பதிவில்  சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அவருக்கு முதலில் வாய்ப்பு தர இருந்த என்னை, யார் என்றே தெரியாது என்று கூறியது தனக்கு வருத்தம் அளிக்கிறது எனவும் சோகத்துடன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நேரடியாக பிரச்சனை வந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சிவகார்த்திகேயன் அந்த விஷயத்தில் அமைதி காத்ததால் அந்த விஷயம் அப்போது பெரிதாக பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement