அன்னபூரணி அவதாரத்தை தொடர்ந்து சாதனம்மா அவதாரம் எடுத்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் போலி சாமியாருக்கு பஞ்சம் இல்லை. அதிலும் சில வாரங்களாகவே சமூக வலைதளத்தில் திடீர் சாமியார் குறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதி பராசக்தியின் அவதாரம் என்று லேட்டஸ்டாக பெண் சாமியார் ஒருவர் புது அவதாரம் எடுத்துள்ள வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி இருந்தது. அது, அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார் அன்னபூரணி.

மேலும், அந்த வீடியோவில் பொதுமக்கள் பக்தி பரவசத்தால் கத்திக்கொண்டும், பூஜை செய்யும் வீடியோக்கள் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அன்னபூரணி திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்து பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்னபூரணி மீது புகார் எழுந்தது.

Advertisement

திடீர் அம்மன் அன்னபூரணி :

ஆனால், தற்போது அன்னபூரணி திடீர் சாமியாராக அவதாரம் எடுத்து உள்ளார். இது குறித்து பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டும் கண்டித்தும் வந்தார்கள். இந்நிலையில் அன்னபூரணிக்கு போட்டியாக யூடிபர் சாதனா என்ற பெண் ஒருவர் சாதனம்மா என்ற பெயரில் அம்மன் அவதாரம் எடுத்துள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அலட்டல் ராணி அன்னபூரணி அம்மன் அவதாரம் எடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை பொருளாகவே இருந்தது.

அன்னபூரணிக்கி போட்டியாக புதிய அம்மன் :

இந்நிலையில் அதை இமிடேட் செய்யும் வகையில் சாதனா என்ற யூடிபர் ஒருவர் இப்போது சாதனம்மா என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாதனா அம்மாவாக அவதாரம் எடுத்திருக்கிறார். அன்னபூரணி அரசு போலவே இவரும் குதித்து குதித்து கொடூர பார்வையை வீசுகிறார். மேலும், அவரை சுற்றி இருப்பவர்கள் தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். உடனே சாதனா பக்தர்கள் மீது வெற்றிலையை பிய்த்து வீசி ஆசீர்வாதம் வழங்குகிறார்.

Advertisement

டிக் டாக் சாதனா :

அங்கிருக்கும் பக்தர்களும் அம்மா தாயே என்று கரகோஷம் செய்து மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். இப்படி ஆளாளுக்கு அம்மன் வேடம் போட்டு வீடியோ வெளியிடுவது கடவுளை கேலி செய்யும் விதத்தில் இருப்பதாக சோஷியல் மீடியாவில் கூறிவருகிறார்கள். இதனையடுத்து சாதனாவிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியது, நான் அன்னபூரணியை இமிடெட் செய்யவில்லை. தன் மனதில் தோன்றியதை செய்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

மீண்டும் கொதிக்கும் நெட்டிசன்கள் :

இப்படி சாதனா கூறியுள்ள கருத்தும், வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டல், கேலி செய்தும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதோடு கடவுள் என்ற பெயரில் இந்த மாதிரி ஆங்காங்கே போலி சாமிகள் உருவாவதை தடுக்க வேண்டும் என்றும் இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Advertisement