பட வாய்ப்புக்காக படுக்கையில். ஸ்ரீரெட்டி பாணியில் சர்ச்சையை கிளப்பிய டிக் டாக் ராணி.

0
32698
ilakiya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றன. இந்த டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்களை விட பதிப்படைந்தவர்கள் ஏராளம். ஆனால், டிக் டாக் இலக்கியாவின் கதையே வேறு. டிக் டாக்கில் திறமைகளை விட ஆபாசங்கள் தான் நிறைந்து வழிகிறது.

-விளம்பரம்-
Image result for tiktok ilakkiya in zombie

- Advertisement -

அதிலும் பல்வேறு பெண்கள் கவர்ச்சியான விடீயோக்களை பதிவிட்டு தான் பிரபலத்தை பெற்று வருகின்றனர். அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா. 2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இலக்கியா டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார். ஆயிரணக்கான லைக்குகளுக்கு ஆசைப்பட்ட இலக்கியாவுக்கு, இப்போது லட்சணக்கக்கில் லைக்குள் குவிந்துவருகின்றன.

எல்லா வகையான மது பாட்டில்களுடனும் இலக்கியா வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.மேலும், சினிமாவில் வரும் டபுள் மீனிங் வசனங்களுக்கு டிக் டாக் செய்வது, அரை குறை ஆடை அணிந்து கவர்ச்சியான நடனமாடுவது என்று டிக்டாக்குகளில் பிரபலமாகிய இலக்கியாவின் பெயரில், சிலர் போலி கணக்குகளை தொடங்கி மோசடி செய்யவும் ஆரம்பித்தனர். இலக்கியாவுடன் டிக்டாக் வீடியோ பதிவு செய்யலாம், அதற்கு 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என சிலர் பேடிஎம், கூகுல் பே ஆகிய செயலி மூலம் பணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளர்.

-விளம்பரம்-

இந்த விளம்பரம் உண்மை என்று கருதிய பலர், 5 ஆயிரம் ரூபாயை அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, சில நாட்களுக்கு பிறகு இது மோசடி என்பதை உணர்ந்தனர். நண்பர்கள் மூலம் இந்த மோசடி நடந்ததை அறிந்துகொண்ட இலக்கியா, உடனடியாக எச்சரிக்கை வீடியோவை பதிவு செய்தார். மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இலக்கியா, டிக் டோக் மூலம் புகழ் பெறுவதற்கு முன்பு நான் திரைப்படத் துறையில் நுழையமுயற்சித்திருக்கிறேன். டிக் டோக்ஸ் செய்வதற்கு முன்பு நான் படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் அந்த படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனது டிக் டோக் புகழ் மூலம் சோம்பியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நான் ஆடிஷனில் கலந்து கொண்டு தான் படத்தில் நடித்தேன். ஒரு படத்தில் கமிட் ஆன பிறகு, படப்பிடிப்பு நாளுக்கு முன்பு இயக்குனருக்கு தனிப்பட்ட சந்திப்பு தேவைப்படும். நாங்கள் அங்கு அவர்களை சந்திக்க செல்லும்போது, ​​அவர்களுடன் இருக்க அவர்கள் எங்களிடம் கேட்பார்கள். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், ஆனால் அதற்குப் பிறகு அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வராது. அவர்கள் எங்கள் எண்ணை பிளாக் லிஸ்ட்டில் போட்டு விடுவார்கள். அவர்கள் தங்கள் அடையாளத்தை எங்களுக்கு போலியாக தான் வைத்திருப்பார்கள் . திரைத்துறையில் இந்த விஷயங்கள் நடக்கின்றன. இது எனக்கு தனிப்பட்ட முறையில் நடந்தது

Advertisement