ஸ்பா என்ற பெயரில் பலான தொழில் – டிக் டாக் சூர்யாவை கைது செய்த போலீசார்.

0
3581
surya
- Advertisement -

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக ரௌடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளமான டிக் டாக் மூலம் பலர் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் டிக் டாக் சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார். இந்த பெயரின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர். மேலும், இவர் வெளியிடும் வீடியோக்களில் முரட்டுத்தன சுபாவங்களை வெளிப்படுத்துவதால் ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்படார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார்.

-விளம்பரம்-
டிக் டாக்கில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடும் சூர்யா தற்கொலை முயற்சி..!  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! | tik tok surya suicide attempt for  depression

இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை விட ஹேட்டர்ஸ்கள் தான் அதிகமாக இருந்து வருகிறார்கள். மேலும், இவர் டிக்டாக்கில் இருந்தபோது இவர் மீது பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூட வைத்திருந்தார்கள். அதேபோல பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தான் ஒரு சிலருடன் தவறான உறவில் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது திருந்தி ஒரு நல்ல மனுஷியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில்தான் இவர் திருச்சி மாநகர காவல் துறையினரால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்களின் உத்தரவின் பெயரில் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு பியூட்டி பாக்களில் விபச்சார தடுப்பு தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தி உள்ளார்கள் இந்த சோதனையின் போது டிக் டாக் புகழ் சூர்யா உட்பட 10 க்கும் மேற்பட்டவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஆனால், தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும் தனக்கும் அந்த ஸ்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி இருக்கிறார் சூர்யா. இருப்பினும் சூர்யாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு , காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement