சில தினங்களுக்கு முன்பு இந்தியா- சீனாவுக்கு இடையே நடந்த எல்லைப் பிரச்சனையில் பல சோக சம்பவங்கள் நிகழ்ந்தது. கடந்த மாதம் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் இருக்கும் பதற்றத்தைத் தணிக்க இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் மத்தியில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு ஓரளவு நிலைமை சரியாக தொடங்கியது. இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேரை சீன இராணுவம் கொன்ற பிறகு இரு நாட்டுக்கும் இடையே பிரச்னை பெரிய அளவுக்கு உருவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள சீனத் தூதரங்கம் முன்பும், கர்நாடகா முதலான வேறு சில இடங்களிலும் சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் கட்சியின் தலைவர்கள் பலர் சீனாவின் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிகில் பட நடிகரின் தந்தை – யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

Advertisement

அதோடு பலரும் சீன பொருட்கள் மற்றும் செயலிகளை புறக்கணிப்போம் என்றும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுவந்தனர். அதே போல இந்த 59 ஆப்களில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது தான் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. டிக் டாக் செயலை மட்டும் மீண்டும் அனுமதிக்குமாறு டிக் டாக் விரும்பிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

டிக் டாக் செயலியை போனில் வைத்திருந்தாலும் அது இயங்குவதற்கான server எனப்படும் இனைய சேவையை இந்தியா நீக்கியுள்ளது. ஆனால், தற்போதும் சிலர் இந்தியாவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. எது எப்படி எனில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் டிக் டாக் செயலியில் மொழியை மாற்றி டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement