Tmsன் திருமண நாள் இன்று – திருமண பத்திரிகையில் ரேஷன் அரசி குறித்து அச்சிடடிப்பட்ட வரிகள். என்ன காரணம் தெரியுமா ?

0
738
Tms
- Advertisement -

சினிமா உலகில் இசையில் தனெக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவருக்கு என்று இன்று வரை ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். சௌந்தரராஜன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்று உள்ளார்.

-விளம்பரம்-

இவரின் காதல், துள்ளல், சோகம், தத்துவம் என கலவையான பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார், மேலும் அரசியல் காட்சிளை உயர்த்தி 4 ஆயிரம் பாடல்கள், 3 ஆயிரம் பக்தி பாடல்கள் என நாற்பது ஆண்டுகாலம் தமிழ் இசையுலகில் முடி சூடா மன்னனாக வாழ்ந்தவர் டி.எம் டி.எம் சவுந்தர்ராஜன். தற்போது திரையிசை திறமை கொண்ட பாடகர்கள், புதிய தொழில் நுட்பங்கள் என பலவிதமாக மாறி விட்டாலும் டி.எம்.எஸ் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் இருந்து வருகிறது.

- Advertisement -

நான் ஆணையிட்டால் :

இவர் பாடிய அரசியல் பாடல்கள் காட்சிகளின் கொள்கைகளை பரப்பியது. உதாரணமாக எம்.ஜி.ஆருக்கு அவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீகிக்காது இருக்கின்றன. “நான் அணையிட்டால் அது நடந்து விட்டால்” பாடல் இன்று வரையில் அதிமுகவின் அரசியல் மேடைகள் ஒழித்து கொண்டிருக்கிறது. மேலும் மு. கருணாநிதியின் பிடித்தமான பாடகராக இருந்தவர் டி.எம்.எஸ் ஆனால் இவர் இருந்த போதும் சரி மறைந்த போதும் சரி இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

டி எம் எஸ் அவர்களுக்கு கடந்த 28-03-1946 ஆம் ஆண்டு அதாவது, சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே திருமணம் நடைபெற்றது. டி எம் எஸ் அவர்கள் சுமுத்திராவை என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இன்று அவரின் திருமண நாளில் அவரின் திருமண பத்திரைக்கு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பத்திரிகையின் கடைசியில் தங்கள் ரேஷன் அரிசியை இரண்டு தினங்களுக்கு முன்னதாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது இந்த வரிகள் சுதந்திர இந்தியாவிற்கு முன்னர் இருந்த அரிசி தட்டுப்பாடு நிலைமையை தெளிவுபடுத்துகிறது

-விளம்பரம்-

டி எம் எஸ் அவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கும் பத்ம ஸ்ரீ விருது மட்டுமே இவருக்கு கிடைத்து. மேலும் இவரின் தீவிர ரசிகராக இருந்தவர் மு.க அழகிரி. இவர் அமைச்சராக இருந்த போது கலைஞரை அழைத்தது மாத்திரையில் டி.எம்.எஸ்க்காக விழா எடுத்தார் அதோடு டி.எம்.எஸ் மறந்த பிறகு அவருக்கு சிலை வைக்க முயற்சி செய்தார் ஆனால் இனனும் சிலை நிறுவப்படவில்லை. ஆனால் மு.க அழகிரி என்பதினால் இவருக்கு மரியாதை கிடைக்க வில்லை என்று சொல்ல முடியாது.ஏனெற்றால் திமுக ஆட்சியின் போது “செம்மொழியான தமிழ் மொழியாம் ” என்ற பாடலின் முதல் வரியையே இவர் தான் பாடினார் என்பது குறிப்பிடதக்கது.

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் :

மேலும் புதிய சூரியன் பார்வையில் உலகம் விழித்துக் கொண்ட வேலையில் என்ற பாடலையும் பாடியவர் டி.எம்.எஸ் தான். இந்த நிலையில் புத்தாண்டு பிறந்து உதய சூரியனும் அரியணை ஏறி விட்டது. இந்த சூழ்நிலையில் மு.கருணாநிதியின் வழியில் செல்வதாக கூறும் மு.க ஸ்டாலின் கலைஞர் டி.எம்.எஸ்க்கு புகழ் சேர்ப்பாரா என்பது மக்களின் வேண்டுகோளாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று டி எம் எஸ் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அந்த பெயர் பலகையை காணொளி மூலம் திறந்து வைத்தார் ஸ்டாலின்.

Advertisement