இந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்ய போறேன் – ரசிகர்களின் கருத்து கேட்ட ஷாலு சம்மு. வேண்டாம் என்று சொன்ன 70% பேர்.

0
1393
shalu-shammu
- Advertisement -

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

-விளம்பரம்-
Shalu Shammu latest stills in red color outfit | Moviezupp

தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : படு மோசமான உடையில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டிக் டாக் இலக்கியா போட்ட ஆட்டம் – வீடியோ இதோ.

- Advertisement -

தேர்தல் என்றாலே சினிமா நடிகர்களை வைத்து அரசியல் காட்சிகள் பிரச்சாரம் செய்வது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் இந்த தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக சார்பாக பல சினிமா பிரபலங்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகையான ஷாலு ஷம்மு வரும் தேர்தலில் அதிமுகவிற்குஆதரவாக பிரச்சாரம் செய்ய யோசித்து வருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாலோவர்ஸ்ஸிடம் கருத்தை கேட்டுள்ளார். நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படடங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement