ஃபோர்ப்ஸ் 100 பணக்காரர்கள் பட்டியலில் 5 தமிழர்கள், 6 பெண்கள் இடம்பெற்றுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற மிகவும் பிரபலமான இதழ்களில் ஒன்று தான் போர்ப்ஸ் இதழ்.
ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 14 வது ஆண்டாக தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

ஷிவ் நாடார்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முன்னிலை வகித்து வருகிறார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இவரின் சொத்து மதிப்பு 92.7 பில்லியன் டாலர் ஆகும். பின் இந்த பட்டியலில் அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருப்பது கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு 74.8 பில்லியன் டாலர் ஆகும். அவரை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருப்பது ஷிவ் நாடார். இவர் எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 31 பில்லியன் டாலர் ஆகும். ஷிவ் நாடார் தமிழகத்தை சேர்ந்தவர். தற்போது இந்த நிறுவனத்தின் தலைவர் பதவியை அவருடைய மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதுமட்டுமில்லாமல் ஷிவ் நாடார் தனது அறக்கட்டளை மூலம் 662 மில்லியன் டாலர்களை நன்கொடையாக கொடுத்துள்ளாராம். இந்தியாவின் பணக்கார பட்டியலில் 41 ஆவது இடத்தை பிடித்த கோடீஸ்வரர் முருகப்பா குழுமம். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய சொத்து மதிப்பு 4.7 பில்லியன் டாலராகும். 1900 ஆண்டு ஏ.எம்.முருகப்ப செட்டியரால் தொடங்கப்பட்டது இந்த முருகப்பா குழுமம். தற்போது இக்குழுமம் 28 தொழில்களை நடத்தி வருகிறது. இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இக்குழுமத்தின் தலைவராக தற்போது எம்எம் முருகப்பன் இருக்கிறார். அடுத்ததாக 55 வது இடத்தை பிடித்துள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது சகோதரர்கள். இவர்களின் சொத்து மதிப்பு 3.75 பில்லியன் டாலர் ஆகும்.

முருகப்பா

மேலும், பட்டியல் 68-வது இடத்தில் ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஜி.சந்திர மோகன் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 3.05 பில்லியன் டாலர் ஆகும். இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கலை சேர்ந்தவர். சந்திர மோகன் தமிழகத்தில் பிரபலமான அருண் ஐஸ் கிரீம் கம்பெனியை தோற்றுவித்தவர். அடுத்ததாக 73 ஆவது இடத்தை பிடித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் அமல்கமேசன்ஸ் குடும்பம் பிடித்துள்ளது அமல்கமேஷன்ஸ் குடும்பம் உற்பத்தியில் புகழ் பெற்றது தான் அமல்கமேஷன் குடும்பம். பிரபல தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன் இந்த குழுமத்துக்கு தலைமை தாங்கி வருகிறார். TAFE டிராக்டர் உற்பத்தியில் புகழ்பெற்றது அமல்கமேசன்ஸ் குடும்பம்.

Advertisement
ஸ்ரீதர் வேம்பு

உலகின் மூன்றாவது TAFE டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாக இக்குழுமம் உள்ளது. இவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு 2.89 பில்லியன் டாலர் ஆகும். பட்டியலில் அடுத்ததாக 78வது இடத்தில் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் உள்ளார். தென்னிந்தியாவின் பல்வேறு மொழிகளில் டிவி சேனல்கள், ரேடியோ, செய்தித்தாள்களை சன் குழுமம் நடத்தி வருகிறது. இவர்களுடைய சொத்து மதிப்பு 2.75 பில்லியன் டாலர் ஆகும். சன் குழுமம் மொத்தம் 33 சேனல்களை கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆறு பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலில் ஜிண்டால் குழுமத்தை சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் இடம் பெற்று உள்ளார். இவர் பணக்கார பட்டியலில் 71ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 13.46 லட்சம் கோடி ஆகும்.

Advertisement
மல்லிகா ஸ்ரீனிவாசன்

அடுத்ததாக பட்டியலில் ஹேவல்ஸ் இந்தியாவைச் சேர்ந்த 76 வயதான வினோத் ராய் குப்தா. இவர் பட்டியலில் 24 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு இவரின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 7.6 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்தது மும்பையைச் சேர்ந்த மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட்டின் லீனா திவாரிக்கு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த பட்டியலில் இவர் 43ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

கலாநிதிமாறன் மற்றும் மகள் காவ்யா

அவரின் சொத்து மதிப்பு 4.4 பில்லியன் டாலர் ஆகும். அடுத்து பட்டியலில் 47ஆவது இடத்தை பிடித்து உள்ளது பைஜூஸ் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத். இவர்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக பாடங்களை கற்பித்துவருகின்றன. இவரின் சொத்து மதிப்பு 4.05 பில்லியன் டாலர் ஆகும். பட்டியலில் 53 வது இடத்தில் பயோகானின் கிரண் மசும்தார் ஷா உள்ளார். இவர் சொத்து மதிப்பு 3.9 பில்லியன் டாலர் ஆகும்.

Advertisement