ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனாவின் ஆட்டம் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி மக்கள் திக்குமுக்கு ஆடி போய் உள்ளார்கள். நாளுக்கு நாள் இந்த கொரோனாவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து உள்ளார்கள். தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 8356 பேர் பாதிக்கப்பட்டும், 273 பேர் பலியாகியும் உள்ளனர். நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

Advertisement

மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சினிமா முதல் சின்னத் திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், காவல்துறை, அரசாங்கம், சுகாதாரத்துறை என பலரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நிவாரணம் கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தி உள்ளார்கள். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு புளியந்தோப்பைச் சோ்ந்த 8 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து சில தினங்களுக்கு முன் வந்து உள்ளனர்.

Advertisement

பின் திடீரென்று அந்த திருநங்கைகள் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அமர்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநங்கைகள் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என ரஜினி இடம் கோரிக்கை விடுத்தனர். திருநங்கைகளின் இந்த திடீர் தர்ணா போராட்டத்தினால் ரஜினிகன்னத்தின் மொத்த குடும்பமும் அதிர்ந்து போனது.

Advertisement

பிறகு உடனே வீட்டில் இருந்த ரஜினியின் மனைவி லதா அவர்கள் தனது வீட்டின் காவலாளி மூலம் திருநங்கைகளுக்கு ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திருநங்கைகளின் இந்த போராட்டம் சுமாா் அரைமணி நேரம் பரபரப்பாக நடந்தது. இந்த நிலைமையை அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் என்று கூறினார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு “தர்பார்” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும்படம் அண்ணாத்த. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

Advertisement