‘பீஸ்ட்’ போஸ்டரில் ஸ்கோப்பை கேலி செய்த அஜித் ரசிகர்கள் – வலிமை போஸ்டரை கூகுள் போட்டோ என்று கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்.

0
2323
valimai
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இது நாள் வரை வரவில்லை. நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : படத்தின் பெயரையே தப்பாக போட்டு மோஷன் போஸ்டரை பகிர்ந்த போனி கபூரின் மகள் – சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள்.

- Advertisement -

ஆனால், இந்த போஸ்டர் ஏதோ Fan made போல உள்ளது என்றும் இந்த போஸ்டருக்கு இரண்டு வருடங்களாக பில்ட் அப் கொடுத்தார்களா என்றெல்லாம் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதே போல இந்த படத்தின் போஸ்டரை பிகில், தசாவதாரம் துவங்கி அக்சய் குமார் நடிப்பில் வெளியான கிராக் படத்தின் போஸ்டர்களுடனும் இந்த படத்தின் போஸ்டரை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் வந்த ஒரு புகைப்படம் கூகுளில் இருந்து சுடப்பட்ட புகைப்படம் என்று நெட்சன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டரில் ஷாட் கன்னில் ஸ்கோப்பா என்று அஜித் ரசிகர்கள் கலாய்த்து இருந்தனர். ஆனால், தற்போது வலிமை படத்தின் போஸ்டேரே இப்படி ஒரு சோதனையில் சிக்கியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement