தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. 1999 ஆம் ஆண்டு பிரசாந்த்– சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் திரிஷா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அதோடு இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை திரிஷா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை திரிஷா அடிக்கடி லைவ் சாட்டில் வந்து தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை திரிஷாவிடம் ரசிகர் ஒருவர், உங்களை பார்வையில் இந்தியாவின் சிறந்த மூன்று நடிகர்களை சொல்லுங்க என்று கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த திரிஷா, ‘கமல், மோகன் லால், அமீர் கான்’ என்று பதில் அளித்துள்ளார். நடிகை திரிஷா, விஜய்யுடன் குருவி, ஆதி, கில்லி, திருப்பாச்சி என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதே போல அஜித்துடன் கிரீடம், என்னை அறிந்தால் , மங்காத்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் பெயரை சொல்லாதது தான் அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்சட்டில் ஆழ்ந்துள்ளனர்.