என் வாழ்க்கையை மாற்றிய நாள் – திரிஷா பதிவிட்ட அரிய புகைப்படம் – என்ன தெரியுமா ?

0
1113
Trisha
- Advertisement -

தமிழ் திரையுலகில் ‘ஜோடி’ என்ற படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. இது தான் நடிகை த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம். ‘மௌனம் பேசியதே’ படத்துக்கு பிறகு ‘மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி’ போன்ற சில படங்களில் நடித்தார் த்ரிஷா.தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
View this post on Instagram

30/09/1999👑 The day my life changed…❤️ #MissChennai1999

A post shared by Trish (@trishakrishnan) on

அதே போல தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என அணைத்து நடிகர்களுடன் நடித்துவிட்டார் திரிஷா. அதிலும் திரிஷா நடித்து 2018-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை திரிஷா நடிகையாவதற்கு முன்பாக மாடல் அழகி என்பது பலரும் அறிந்த ஒன்று. மேலும், இவர் 1999 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றவர்.இந்த போட்டியின் கடைசி சுற்றில் `மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’ என்ற கேள்விக்கு த்ரிஷா சொன்ன பதில் – நேர்மை.`

- Advertisement -

`எது இல்லையோ. எது தேவைன்னு அந்த கணத்தில் எனக்குத் தோன்றியதோ அதைத்தான் சொன்னேன். நூறு சதவிகித நேர்மையுடன் வாழும் மனிதன் யார் ? ஆனால், அப்படி வாழும் நிமிடங்கள் சந்தோஷமானவை தெரியுமா.” என்று நேர்மையாக வாழ்வது பற்றி கூறியிருந்தார் திரிஷா. மாடல் அழகி பட்டத்தை வென்ற திரிஷா ஜோடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார்.

இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று நடிகை திரிஷா வாழ்க்கையில் மிகவும் மறக்கமுடியாத நாள். அது என்னவெனில் இதே தேதியில் தான் கடந்த 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றார் திரிஷா. அதனை குறிப்பிட்டு என் வாழ்க்கையை மாற்றிய நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement