டிஆர்பியில் விஜய் டிவியை முந்திக்கொண்டு சன் டிவி சீரியல்கள் முன்னிலையில் இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது.

சின்னத்திரையில் சீரியல் மட்டும் இல்லாமல் காமெடி ஷோ, பலவித ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள், வெரைட்டி வெரைட்டியான நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது.

Advertisement

சன் டிவி சீரியல் பற்றிய தகவல்:

இதனாலே மக்கள் வெள்ளித்திரைக்கு அதிகம் செல்வதை விட சின்னத்திரையை தான் அதிகம் கவனிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுபுது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் என தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. சன் டிவியில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.

விஜய் டிவி சீரியல் பற்றிய தகவல்:

அதேபோல ரசிகர்களின் பேவரட் சேனல்களாக விஜய் டிவி விளங்கி வருகிறது. விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ தான் என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கியது விஜய் டிவியில் தான். மேலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் பிரபலத்திற்கு இணையாக சீரியல்களும் பிரபலமாக இருக்கின்றன. சன்டிவி போலவே விஜய் டிவியிலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை பல சீரியல்களை டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

டிஆர்பியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சீரியல்:

இப்படி சன் டிவி மற்றும் விஜய் டிவிகளில் தான் அதிக சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சேனல்களின் இடையில் தான் டிஆர்பி மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஏ டி ஆர் பியில் முதல் 4 இடங்களை விஜய் டிவி சீரியல் தான் இடம் பிடிக்கும். இந்நிலையில் தற்போது சென்றவார டிஆர்பி ரேட் வெளியாகி உள்ளது. இதில் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட கயல் தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது. சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சன் டிவி தொடர் விஜய் டிவியை ஓரங்கட்டி முன்னுக்கு வந்துள்ளது. இரண்டாமிடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடர் பிடித்துள்ளது.

Advertisement

பாரதி கண்ணம்மா பிடித்து உள்ள இடம்:

மூன்றாம் இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடர் பிடித்துள்ளது. நான்காம் இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் பிடித்துள்ளது. எப்போதுமே முதல் இரண்டு இடங்களில் பாரதிகண்ணம்மா தொடர் தான் இருக்கும். தற்போது பாரதிகண்ணம்மா தொடர் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த கதை ஜவ்வு போல் இருப்பது என்று மக்கள் சொல்கிறார்கள். ஐந்தாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்துள்ளது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து இனிவரும் காலங்களில் விஜய் டிவி சீரியல் சூடுபிடித்து டிஆர்பியில் பழையபடி முந்தி வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement