ராஜ்யசபா எம்.பி ஆகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ், முதல்வருடன் திடீர் சந்திப்பு – எந்த கட்சியில் தெரியுமா ?

0
365
prakash
- Advertisement -

நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் ராஜ்யசபா எம்பி ஆகிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

-விளம்பரம்-
இரண்டாம் திருமணம் செய்த பிரகாஷ் ராஜுக்கு இவ்ளோ பெரிய மகனா..? புகைப்படம் இதோ  - Tamil Behind Talkies

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் மிரட்டி இருக்கிறார். அதிலும் பிரகாஷ் ராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது செல்லம் தான். அந்தளவிற்கு கில்லி படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார்.

- Advertisement -

பிரகாஷ் ராஜின் திரைப்பயணம்:

அதிலும் சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க, சமீப காலமாகவே பிரகாஷ் ராஜ் அவர்கள் சோசியல் மீடியாவில் அரசியல்வாதிகளை தாக்கியும் அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

தொடர்ந்து செய்து வரும் நிதியுதவியில் பணமே இல்லை - ஆனாலும் , இப்படி உதவி  செய்வேன் - பிரகாஷ் ராஜ் - Tamil Behind Talkies

சோசியல் மீடியாவில் எழும் சர்ச்சை:

குறிப்பாக பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துக்களை இவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக பிரகாஷ் ராஜ் போட்டியிட்டு இருந்தார். இந்தத் தேர்தலில் அவர் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

தேர்தலில் தோற்ற பிரகாஷ் ராஜ்:

கடந்தாண்டு நடைபெற்ற தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு ஏழு ராஜ்யசபா எம்பி பதவிகள் இருக்கிறது. அதுவும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வசமே இருக்கிறது.

ராஜ்ய சபா எம்.பி.யாக பிரகாஷ் ராஜ்:

இந்நிலையில் ராஜ்ய சபாவில் எம்.பி.க்களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆகையால் காலியாகும் இந்த இரண்டு எம்.பி. பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடக்கிறது. இதனால் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் முன்னதாகவே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து பிரகாஷ்ராஜுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதிலாவது பிரகாஷ் ராஜ் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement