யூடுயூபில் பைக் சாகசங்கள் செய்து 2k கிட்ஸ் மனதில் ஹீரோவாக திகழ்ந்து வரும் TTF வாசன் பைக் விபத்தில் சிக்கிஇருக்கும் விஷயம் தான் கடந்த இரண்டு தினங்களாக பேசுபொருளாகி இருக்கிறது. என்னதான் இவருக்கு 2k கிட்ஸ் ஆதரவு இருந்தாலும் இவர் இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணம் என்று தான் பலர் கூறி வருகின்றனர். இவர் மீது பல முறை சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் இவர் அடிக்கடி பொது சாலையில் விதி மீறல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து கோர விபத்தில் சிக்கி இருந்தார். இந்த விபத்தில் அவருக்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ttf வாசன் ரசிகர்கள் சிலர் TTF வாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதே சமயம் பெரும்பாலான மக்கள் பலர் இது போன்று போது சாலையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் இவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேணும் என்றும் இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்றும் காவல் துறை பரிந்துரை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

இந்நிலையில், டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அங்கேயும் பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ttf வாசன் தரப்பில் மனுதாரரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் , இனி அவர் வாகனம் ஓட்ட இயலாது.

Advertisement

மேலும், அவர் 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று வாரங்களுக்கு, டிடிஎஃப் வாசன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இப்படி ஒரு நிலையில் TTF வாசன் பைக் விபத்தில் சிக்கிய போது அவரது Go pro கேமராவில் பதிவான வீடியோ வெளியாகி இருக்கிறது.

Advertisement