மஞ்சள் வீரன் படத்தில் இருந்து ஹீரோ டிடிஎஃப் வாசனை இயக்குனர் நீக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் பைக்கில் இருக்கும் ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு தொடர்பாக உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர். இப்படி இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இப்படி இவர் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு இருந்தார்கள். இருந்தாலும், இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:
இவர் மஞ்சள் நடிகராக என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக வாசன் நடிப்பு பயிற்சி எடுத்ததாக கூறப்படுகிறது.
அதோடு இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வாசனுடைய பிறந்தநாள் அன்று வெளியாகி இருந்தது. அதற்குப் பிறகு இந்த படத்தை குறித்து எந்த தகவலுமே வெளியாகவில்லை. இந்த நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கிவிட்டதாக இயக்குனர் கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இயக்குனர் செல்அம் பேட்டி:
இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் செல்அம், இந்த செய்தியாளர் சந்திப்பு எதற்கு என்றால்? மஞ்சள் வீரன் படத்தை நான் இயக்குவது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தில் கதாநாயகனாக டிடிஎஃப் வாசன் நடித்தார். ஆனால், தற்போது அவரை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். வேறு ஒரு நடிகர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அது தொடர்பான தகவலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிட இருக்கிறோம். அவரை நீக்குவதற்கு காரணம், சூழ்நிலை ஒத்து வரலை. அவருடைய வேலைகளை பார்த்துக் கொண்டும் இந்த படப்பிடிப்பில் நடிப்பதற்கும் சூழ்நிலைகள் அமையவில்லை.
ஹீரோ நீக்கம்:
படத்தின் பூஜைகள் எல்லாம் போடப்பட்டது. ஹீரோ காட்சிகளை தவிர வில்லன், ஹீரோவோட அம்மா காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டது. புதிய ஹீரோ தேர்வான உடனே படத்தை எடுத்து முடித்து சீக்கிரமாகவே வெளியிட இருக்கிறோம். டிடிஎஃப் வாசன் அடுத்த சூப்பர் ஸ்டார் தான், ஆனால் என்னுடைய சூழ்நிலைகளுக்கு அவர் ஒத்துவரலை. அதனால் தான் படத்தை விட்டு நீக்கி விட்டேன். அவர் கைது செய்யப்பட்டது காரணம் கிடையாது.
மனம் திறந்த நடிகை:
என்னுடைய படைப்போடு அவரை டிராவல் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவர் ஒத்துவரவில்லை. மனதளவில் ஒத்து வரவில்லை. அவர் என்னைக்கோ ஒரு நாள் தான் கைதானார். 365 நாட்களில் ஐந்து நாள் தான் கைதானார். மற்ற நாட்கள் ஃப்ரீயாக தான் இருந்தார். எனக்கும் அவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஏற்கனவே ஒரு படம் எடுத்து தோல்வியடைந்து. இந்த படத்தில் சாதிக்கணும் என்று உட்கார்ந்து இருக்கிறேன். அதனால் ஏனோ தானோ என்று படம் எடுக்க முடியாது. இன்னும் இந்த தகவலை நான் ஹீரோவிடம் சொல்லவில்லை. மக்களிடம் நேரடியாக சொல்லி படத்தினுடைய அப்டேட்டை கொடுக்க வேண்டும் என்று தான் சொன்னேன் என்று கூறி இருக்கிறார்.