மஞ்சள் வீரன் படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்று இயக்குனர் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் பைக்கில் இருக்கும் ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு தொடர்பாக உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர். இப்படி இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மட்டுமில்லாமல் இப்படி இவர் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றார்கள்.

Advertisement

டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:

இப்படி இவர் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் இருந்தாலும் தற்போது இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். இந்த படம் குறித்து அறிவிப்பை டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் அன்று அறிவித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டிடிஎஃப் வாசன் நடிக்கும் படம்:

மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக இவர் நடிப்பு பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இவருடன் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வாசனுடைய பிறந்தநாள் அன்று வெளியாகி இருந்தது. இந்த போஸ்டர் வெளியானதிலிருந்து சோசியல் மீடியாவில் பலரும் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

Advertisement

இயக்குனர் அளித்த பேட்டி:

இந்த நிலையில் youtube சேனல் ஒன்றுக்கு மஞ்சள் வீரன் பட இயக்குனர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் படம் குறித்த பல கேள்விகள் பதிலளித்திருந்தார். அப்போது டிடிஎஃப் வாசனை தேர்வு செய்தது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்காக டிடிஎஃப் வாசனின் முகம் கத்தி போல இருக்கும். அதை பார்த்ததிலிருந்து இந்த படத்திற்கு அவர்தான் சரியானவராக இருப்பார் என்று நினைத்தேன். இந்த படம் 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு டிடிஎப் வாசன் சண்டை டான்ஸ் போன்றவற்றை பயிற்சி எடுத்து வருகிறார்.

Advertisement

ஆஸ்கர் விருது குறித்து சொன்னது:

மேலும் மஞ்சள் வீரன் படம் கண்டிப்பாக 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடும். ஆனால், மஞ்சள் வீரன் படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுத்தால் வாங்க மாட்டேன். காரணம், வெள்ளையனே வெளியேறு என்று அனைவரும் போராடி அவர்களை வெளியேற்றிவிட்டு மீண்டும் அவர்கள் கையால் கொடுக்கும் ஆஸ்கர் விருதை வாங்க மாட்டேன். ஆனால், தேசிய விருது கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் என்று பேசி இருக்கிறார். பேட்டியிலேயே இப்படி காமெடியாக பேசும் இயக்குனர் படத்தை எப்படி எடுத்து முடிக்க போறாரோ என்று நிட்டிசன்கள் கவலையில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement