கடந்த இரண்டு நாட்களாக சீரியல் நடிகை நிலானி என்பவரால் உதவி இயக்குனராக இருந்த காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 வருடங்களாக பழகி வந்த நிலானி, தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

காந்தி லலித்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் மீது போலீசில் புகார் அளித்திருந்த நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தகராறு செய்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்திருந்தார். ஆனால், காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு பின்னரே நிலானிக்கும், காந்தி லலித்குமாருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்று சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த நிலானி முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எனக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. என்னை என்கணவர் விட்டு சென்றுவிட்டார். நான் எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது நான் தனியாக தான் வாழ்ந்து வந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் தான் எனக்கு காந்தி லலித்குமாரை தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவருடன் முதலில் நான் நட்பாக தான் பழகி வந்தேன், அவர் எனக்கு பல உதவிகளை செய்து வந்தார். ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காந்தி லலித்குமார் என்னிடம் கேட்டார். ஆனால், எனக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றுஅவரிடம் தெரிவித்துவிட்டேன். பின்னர் சிறிது காலம் கழித்து எனக்கு ஒரு ஆண் துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றி அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தேன்.

நாங்கள் இருவரும் ஒரு குறும் படத்தில் நடித்தோம் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அனைவரிடமும் நான் தான் அவருடைய மனைவி என்று கூறிவந்தார், இதில் தான் அவருக்கும் எனக்கும் முதல் முறையாக சண்டை வந்தது. அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கும் பல்வேறு பழக்கம் உள்ளது என்று எனக்கு தெரியவர நான் அவரைவிட்டு விலகினேன்.

அவருடன் பழகியது உண்மை தான் ஆனால், நான் பழக ஆரம்பித்த 6 மாதத்திலேயே அவருடைய குணம் தெரிந்து அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனாலும், அவர் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து கொண்டே வந்தார். என்னுடைய பெயர் கெட்டுப்போக கூடாது என்று தான் நான் மீடியாவில் தெரிவிக்கவில்லை. காந்தி லலித்குமார் தற்கொலைக்கும் எனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement