நடிப்புக்கு ‘No’ சொன்ன கல்யாணி.! காரணம் என்ன தெரியுமா..? புகைப்படம் பாருங்க புரியும் ..!

0
2406
- Advertisement -

சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம் கையை நீட்டினா காசு மழை கொட்டணும்” இந்தப் பாடல் வரிகளைப் படித்ததும், பிரபுதேவா – லைலா நடிப்பில் வெளியான ‘அள்ளித்தந்த வானம்’ திரைப்படத்தில், அழகாக நடனமாடி ஈர்க்கும் குட்டிப் பெண் நினைவுக்கு வருவார். அவர்தான், கல்யாணி. அதன்பிறகு 7 வயதில், ‘ஜெயம்’ படத்தில் க்யூட் ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து நம் மனங்களில் இடம்பிடித்தவர். வெள்ளித்திரை, சின்னத்திரை என ஆல்ரவுண்டராக வலம்வந்தவர்.

-விளம்பரம்-

kalyani actress

- Advertisement -

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். பரபரப்பாக சில சீரியல்களில் முத்திரைப் பதித்தவர், சட்டென திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். பிறகு, ஜீ தமிழ் ‘ஜூனியர் சீனியர்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மீடியாவில் கலக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் பிரேக் எடுத்திருக்கிறார். ‘மறுபடியும் என்ன ஆச்சு?’ எனத் தேடினால், ‘மறுபடியும் ஹேப்பியான பிரேக்தான்’ எனத் தாய்மையுடன் புன்னகைக்கிறார்.

திடீர் திடீர்னு பிரேக் எடுத்துட்டு கிளம்பிடறீங்களே…”

-விளம்பரம்-

“என்னை ஞாபகம் வெச்சுட்டு தேடற அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் முதல் வணக்கம். நான் எங்கேயும் போயிடலைங்க. பெங்களூரில்தான் இருக்கேன். முதல் பிரேக் எடுத்தது, என் திருமணத்துக்கு. இப்போ, நான் அம்மாவாகப் போகிறேன். அதுக்கான பிரேக் இது.”

Actress kalyani

“வாவ்… பேபிக்கும் சேர்த்து வாழ்த்துகள். எத்தனையாவது மாசம்?”

“ஆறாவது மாசம் நடந்துட்டிருக்கு. இந்த நேரத்தில், என் அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன். முதல் மூன்று மாசமும் வளைகாப்பு முடிஞ்சதுக்கு அப்புறமும் அம்மா வீட்டுக்குத்தான் போவாங்க. ஆனா, அம்மாவோட இழப்பை என்னால தாங்க முடியலை. அம்மாவே எனக்குப் பொண்ணாகப் பிறக்கணும்னு ஆசை. நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கங்க.”

“சின்னத்திரை வாய்ப்புகள் தொடர்ந்து வருதா?”

“நிறைய வந்துச்சு. மாசமா இருக்கிறதால் மறுத்துட்டேன். சென்னையில் இருந்தாலும் கொஞ்ச டிரை பண்ணிருப்பேன். ஆனால், பெங்களூரில் இருக்கிறதால் முழுசா பிரேக் எடுக்க முடிவு பண்ணிட்டேன். கடைசியா, ‘ஜூனியர் சீனியர்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். ‘கங்கா’ சீரியலில் நடிச்சேன்.”

kalyani

“நிச்சயமா. பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் மீடியாவில் என்னை எதிர்பார்க்கலாம். எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்” என பன்ச் அடிக்கிறார், ‘ஸ்மைலிங் குயின்’ கல்யாணி.

Advertisement