தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. இதுவரை இதில் அப்பாவி பொது மக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடும் சம்பவத்தை நடத்திய காவல் துறையினரையும், அரசையும் கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தமிழகத்தை தவிர்த்து கர்நாடகாவிலும் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்கள் தொடங்கி சிறய நடிகர்கள் வரை காவல் துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று சின்னத்திரை நடிகை ஒருவர் இந்த கொலை செயலை கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

சன் டிவியில் “பிரியமானவன்” தொடரில் நடித்து வரும் நிலானி என்ற நடிகை காவல் துறை ஆடையில் அந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டார் அதில் “தான் இந்த உடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக உணர்வதாகவும். இந்த ஆடையை அணிந்திருப்பது தனக்கு அருவருப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.” மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அதில் கூறி இருந்தார்.

Advertisement

Advertisement

இதையடுத்து இந்த விடியோவை பார்த்த வடபழனியை சேர்ந்த ரிஷி என்ற ஒரு நபர், காவல்துறையை தவறாக பேசிய அந்த நடிகை மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோவில் பேசிய நடிகை நிலானி மீது ஆள்மாறாட்டம், சமூக வலைத்தளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது, காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியது என்று பல்வேறு துறைகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement