தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் சீரியல் நடிகை. காரணம் இது தானாம்.

0
47773
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள். நடிப்பு துறையில் ஏற்படும் மன அழுத்தம், வீட்டுப் பிரச்சனை தான் இவர்கள் இப்படி செய்வதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். இவர்கள் இப்படித் தொடர்ந்து தற்கொலை முயற்சிக்கு மேற்கொள்வதற்கு காரணம் படங்களிலும், தொடர்களிலும் வாய்ப்பில்லாத நிலை, ஆடம்பர வாழ்க்கை, செலவுகள் தான் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மும்பையில் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை செஜல் ஷர்மா நேற்று இரவு மும்பையி உள்ள தனது பிளாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
 sejal sharma

- Advertisement -

நடிகை செஜல் ஷர்மா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 30 வயது தான் ஆகிறது. பாலிவுட் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற பல கனவுகளுடன் ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்தார். மும்பை வந்து அங்கேயே வீடு எடுத்து தங்கினார். முதலில் செஜல் ஷர்மா அவர்கள் மாடலிங் துறையில் பணி புரிந்து வந்தார். அதற்கு பின்னர் இவருக்கு விளம்பரங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்தார்.

அதன் பின்னர் தான் நடிகை செஜல் ஷர்மா அவர்கள் “டில் தோஹ் ஹேப்பி ஹாய் ஜி” என்ற பாலிவுட் சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானர். இந்த நிலையில் நடிகை செஜல் ஷர்மா அவர்கள் தனது குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவருடன் இரண்டு நண்பர்களும் இருந்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று உள்ளார். நடிகை செஜல் ஷர்மா தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

முதற்கட்ட தகவலின்படி நடிகை செஜல் ஷர்மா அவர்களின் மரணத்திற்கு அவர்களுடைய தனிப்பட்ட காரணம் தான் என்று தெரியவந்து உள்ளது. இவருடைய இறப்பு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வீட்டிலிருந்த இரண்டு நண்பர்கள் யார்? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடிகை செஜல் ஷர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் நடிகை செஜல் ஷர்மா அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் நடிகை செஜல் ஷர்மா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட காரணத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

sejal sharma dil toh happy

இது குறித்து அவருடைய நண்பர்கள் இடம் கேட்ட போது அவர்கள் கூறியது, இவர் ஏற்கனவே தன்னுடைய தந்தையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால் நடிகை செஜல் ஷர்மா நிறைய மன அழுத்தத்தில் இருந்தார். பின் இதனால் நடிகை செஜல் ஷர்மா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட போது அவருடைய நண்பர்கள் அதே வீட்டில் தான் இருந்தார்கள். ஆனால், இவர் தற்கொலை செய்ததை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement