உடல் முழுதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சீரியல் நடிகை ! அதிர்ச்சியில் திரையுலகம்

0
2976
Actress kavitha

திரைப்பட நடிகர்கள் காதல் மற்றும் மன உலச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வதுண்டு . பிரபல நடிகை சிலுக்கு ஸ்மிதா , தவசி படத்தில் நடித்த பிரத் யூ ஷா போன்ற பல நடிகைகள் தற்கொலை செய்த்துள்ளனர். மேலும் அவர்களின் மரணத்தில் சில சந்தேகங்களும் இருந்து தான் வந்தது.

kavitha

சமீப காலமாக சினிமாத்துறையில் பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் சற்று ஓய்ந்திருந்தது.ஆனால் சின்னத்திரையில் சீரியலில் நடித்து வரும் ஒரு சில நடிகர் நடிகைகளின் தற்கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.கடந்த சில ஆண்டுகளிலேயே சீரியல் நடிகர்களான சபர்ணா , பிரசன்னா போன்ற பிரபலங்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மலையாள சீரியல் துறையிலும் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றனர்.

மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து வந்த கவிதா என்ற 35 வயதை உடைய சீரியல் நடிகை கடந்த ஞாயிற்று கிழமை அன்று கேரளாவில் மல்லபுரம் தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவருக்கு திருமணமாகி 4 வயது மகனும் உள்ளார்.

death-kavitha

தனது கணவர் மற்றும் மகனுடன் பெங்களூரில் வசித்து வந்த கவிதா கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தனது வீட்டின் கதவை அடைத்து கொண்டு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கேரள மாநிலம் மல்லபுரம் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.