‘தாயை மதிக்கவில்லையா விஜய்? பாதி வீடியோவ பாத்துட்டு முடிவு பண்ண கூடாது, இந்த வீடியோவையும் பாருங்க

0
494
- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில், தலைவர் விஜய் தனது பெற்றோர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்குப் பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். கடந்த சில தினங்களாகவே விஜய் கட்சி கொடி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று விஜய் தன் கட்சியின் பெயரை அறிவித்தார்.

-விளம்பரம்-

இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற்ம் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். இதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்டு ஒத்திகை பார்த்து இருந்தார். அதோடு பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் ஐந்தாயிரம் பேரை வைத்து கட்சி கொடியை ஏற்ற, போலீசாருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்ததால், விஜய் தன் கட்சி அலுவலகத்தில் 250-300 பேரை மட்டும் வைத்து கட்சிக்கொடியை ஏற்ற முடிவு செய்து இருந்தார்.

கட்சிக் கொடி அறிவித்தல்:

பின் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, சமீபத்தில் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை ஏற்றிருந்தார். கொடியேற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருக்கிறார்கள். அந்தக் கொடியில் வாகை மலரும், இரு பக்கங்களில் யானை படவும் இடம் பெற்று இருக்கிறது. அதேபோல் விழாவில் விஜயின் பெற்றோர்களான இயக்குனர் எஸ். ஏ‌.சந்திரசேகர் மற்றும் ஷோபா பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் மீது சுமத்தப்பட்ட பழி:

ஆனால், அந்த விழாவில் விஜய் தனது பெற்றோர்களை மதிக்கவில்லை என்பது போல் வீடியோக்கள் வைரலாகி இருந்தது. மேலும், நடிகர் விஜய்க்கு ஏதோ சைக்காலஜிக்கல் பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் கொடியேற்றும் விழாவில் அவரின் தாய் சோபா அழைத்தபோது, தாய் என்று கூட பார்க்காமல் விஜய் அவரை புறக்கணித்தார். அவர் தற்போது தனது பெற்றோர்களையும், மனைவியையும் கைவிட்டு விட்டார். ஒருவர் தனது சொந்த குடும்பத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படவில்லை என்றால், அந்த நபர் எடுக்கும் முடிவுகள் உறுதியாக இருக்கும் என்று நாம் எப்படி நம்ப முடியும் என்பது போல் சமூக வலைத்தளங்களில் வீண் பழி சுமத்தி இருந்தார்கள்.

இதுதான் உண்மை:

ஆனால், விழாவில் விஜய் கட்சிக் குறித்து பேசி முடித்துவிட்டு, விழாவிற்கு வந்த தன்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றியை தெரிவித்து இருந்தார். அதேபோல், விழா முடிந்த பிறகு தனது தாய் மற்றும் தந்தையை கட்டித்தழுவி, தனது அன்பையும் வெளிப்படுத்தி இருந்தார். முக்கியமாக, தனது தாய் தன்னை அழைத்த போது, அவரிடம் நின்று, நான் போயிட்டு வரேன் என்பது போல் கூறி இருக்கிறார். தற்போது அந்த வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எனவே, பெற்றோரை என்றும் விட்டுக் கொடுக்காத, உண்மை பாசம் கொண்ட மனிதன் விஜய் அண்ணன் என்று கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement