ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தாரா அஜித் ? உண்மை என்ன ?

0
3482
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். இவரது நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், கோவை சரளா, ரோபோ சங்கர், தம்பி ராமையா என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள் சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப் படத்திற்கு போட்டியாக வெளியான இந்த திரைப்படம் பேட்டை திரைப்படத்தை விட மாபெரும் வெற்றி அடைந்தது. அப்பா மகள் சென்டிமென்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அஜித் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், சமீபத்தில் இந்த திரைப்படம் 300 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து ரசிகர்கள் 300daysofviswasam என்ற ஹேஷ் டேகை அஜித் ரசிகர்கள் டிரென்ட் செய்தார்கள்.

இதையும் பாருங்க : உடல் எடையை குறைக்க கடின பயிற்சி. ஜிம் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.

- Advertisement -

இந்நிலையில் 2019-ம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பிரபலமான ஹேஷ்டேக்குகளில் விஸ்வாசம் படத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளதாக ட்விட்டர்அறிவித்துள்ளது.2019- ஆம் ஆண்டில் விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலை அறிந்த இசையமைப்பாளர் டி.இமான், அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யா ஜோதி நிறுவனம் இந்த தகவலை பெருமையாக பகிர்ந்துள்ளது.

 2019-ம் ஆண்டில் விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலை அறிந்த இசையமைப்பாளர் டி.இமானும் அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்த விஷயத்தால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஆனால் இது இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஹேஷ்டேக்குகளில் ஒன்றுதான். 2019-ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், விஸ்வாசம் ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்ததாக வெளியான செய்தி பொய் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்தாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

Advertisement