பாபா ரீ-ரிலீஸ் குறித்து ரஜினி போட்ட ட்வீட் – இதே தேதியில் ரஜினி போட்ட ட்வீட்டை கலாய்க்கும் ரசிகர்கள்.

0
159
rajini
- Advertisement -

கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

ரஜினி அரசியல்:

விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார் என்றும் நேர்மையான தலைவராக இருப்பார் என்றும் மக்கள் நினைத்து இருந்தார்கள். இது குறித்து பலமுறை கேள்வி கேட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ரஜினி டீவ்ட்:

ஆனால், ஆரம்பத்தில் ரஜினிகாந்த் அவர்கள் அமைதியாக இருந்தார். பின் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், ஜனவரியில் கட்சி துவங்குவோம். மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும்.

வைரலாகும் டீவ்ட்:

இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை குவித்து இருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ரஜினிகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றதோடு மட்டும் இல்லாமல் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டிருந்தார். இதற்கு பலருமே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. ரஜினிகாந்த்தின் இந்த அறிவிப்பு அறிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்து இருக்கிறது. தற்போது அந்த ட்விட்டரை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement