தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட்’ படங்கள் – பின்னணி என்ன ? 

0
681
udhayanid
- Advertisement -

தமிழ் சினிமா தியேட்டர்களை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாமே வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படம் பல சமூக கருத்துக்களை முன்வைத்து இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து உதயநிதி அவர்கள் மாமன்னன் போன்ற சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இந்த நிறுவனம் பிரபல நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் எப்ஐஆர் , எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல 2 காதல், நெஞ்சுக்கு நீதி போன்ற பல பிரபலங்களின் படங்களை வெளியிட்டு இருக்கிறது. தற்போது கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : வெளிநாட்டவர் கூட கண்டுபிடிக்க முடியாதை கண்டுபிடித்து சாதித்த தமிழன் – எல்லாம் அவன் செயல் Rkவின் நீங்கள் அறிந்திராத பக்கம். (அட இந்த Product இவரது தானா)

- Advertisement -

விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. மேலும், இந்த படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் படமும் 100 தியேட்டர்களிலும், உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் 65 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் :

தமிழகத்தில் உள்ள ஆயிரம் தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட படங்களே ஓடிக் கொண்டிருக்கின்றது. மற்ற தியேட்டர்களில் தான் வேறு பல நிறுவனங்களின் படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிட்டால் தான் தியேட்டர்கள் கிடைப்பது எளிது என நினைத்து சில நிறுவனங்கள் அவர்களை அணுகி படங்களை வெளியிடுகிறார்கள்.

-விளம்பரம்-

தமிழகத்தை ஆக்கிரமித்து இருக்கும் நிறுவனம்:

ஆனால், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமோ முக்கியமான பிரபலங்களின் படங்கள், அதிலும் அதிக வசூலை தரும் என்ற நம்பிக்கை உள்ள சில முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுகிறது. அதேசமயம் ஆளும் கட்சியின் வாரிசு நடத்தும் நிறுவனம் என்பதால் பலரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை நாடி வருகிறார்கள். இப்படி திரையரங்களில் தொழிலை ஆக்கிரமித்து செய்வது சரியல்ல என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு எதிராக எதிர்மறை கருத்துக்களை திரை உலகில் சேர்ந்தவர்களும், வெளியில் உள்ளவர்களும் கூறி வருகின்றனர்.

கமலை மிரட்டினாரா உதயநிதி :

ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தை உதயநிதி, தயாரிப்பாளர் அன்புசெழியனிடம் இருந்து மிரட்டி வாங்கியதாக கூட பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும், கமலை மிரட்டி தான் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால், விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ‘கமலை நான் மிரட்டவில்லை, யார் மிரட்டினாலும் பயப்படும் ஆள் அவர் இல்லை’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement