உதயம் NH4 பட நடிகையா இது ..? எப்படி இருகாங்க நீங்களே பாருங்க ! புகைப்படம் உள்ளே

0
3475
udhayamnh4 movie

தமிழில் 2013 வெளியான நடிகர் சித்தார்த் நடித்த உதயம் என். ஹ்ச் 4 என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. அந்த படத்தில் வந்த ஓரா கண்ணால என்ற பாடல் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Actress-ashrita-shetty

1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டர். பின்னர் 2010 மும்பையில் நடைபெற்ற டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கிளீன் அண்ட் பிரஸ் என்னும் அழகி போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பிடித்ததோடு 2010 ஆம் ஆண்டின் சிறந்த முகம் என்ற பட்டத்தையும் வென்றார். அதன் பின்னர் இவருக்கு 2012 டெலிகட போலி என்ற துளு படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது.

அந்த படத்தை முடித்த கையோடு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி கில்ம்பிவிட்டார். அப்போது தான் உதயம் nh4 என்ற படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் வெற்றிமாரனின் உதவியாளராக பணியாற்றிய மணிமாரன் ஒரு பெங்களூரு பெண் போல தோற்றமுள்ள ஒரு பெண்ணை தேடிவந்தார். அப்போது ஒரு டீவி விளம்பரத்தில் அஷ்ரிதாவை பார்த்த மணிமாறன் அவரை உதயம் nh4 இல் காதாநாயாகியாக நடிக்க வைத்தார்.

Ashrita-shetty

Ashrita-shetty-actress

உதயம் nh4 க்கு பிறகு 2014இல் ஒரு கண்ணியும் 3 களவாணியும் என்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை. பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2017 இல் கௌதம் கார்த்திக் நடித்த இந்திரஜித் என்ற படத்தில் நடித்தார்.

ashrita-shety-actress

மேலும் இவர் கடைசியாக நடித்த படம் சில மாதங்களுக்கு முன்னர் நான் தான் சிவா என்ற ஒரு தமிழ் படம் தான். படங்களில் பார்க்கும் போது அழகாக இருந்த அஷ்ரிதா ஷெட்டி தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.