சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்களில் உதயம் திரையரங்கமும் ஒன்று. தற்போது இந்த திரையரங்கம் விற்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இதைப் பற்றிய விவரத்தை தான் இங்கு பார்க்க போகிறோம். சென்னை அசோக் பில்லர் பகுதியில் அமைந்திருக்கும் பிரபலமான திரையரங்கம் தான் உதயம் திரையரங்கம். இங்கு உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என்று நான்கு திரையரங்குகள் உள்ளது.
இந்த காம்ப்ளக்ஸ்ஸில் பல பிரபலமான பிரபலங்களின் படங்கள் எல்லாம் ஓடி இருக்கிறது. ரஜினி, கமல் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்த திரையரங்கில் தான் அவர்களுடைய படமும் படங்கள் எல்லாம் திரையிடப்பட்டு திருவிழா போல் கொண்டாடப்படும். திருநெல்வேலியில் இருந்து வந்து சென்னையில் தானிய விற்பனையில் ஈடுபட்டிருந்த பரமசிவம் பிள்ளை, கல்யாணசுந்தரம் போன்ற 5 சகோதரர்கள் இணைந்து தான் உதயம் திரையரங்கை கட்டியிருந்தார்கள்.
உதயம் திரையரங்கம் :
1983 ஆம் ஆண்டு தான் இந்த திரையரங்கம் திறக்கப்பட்டது. அதன் பின் பல முன்னணி பிரபலங்களின் படங்கள் திரையிடப்பட்டு மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சூரியன், சந்திரன் போன்ற இரண்டு திரையரங்கம் கூடுதலாக திறக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் உதயம் திரையரங்கின் பால்கனிப்பகுதி மறைக்கப்பட்டு தனி திரையரங்காக உருவாக்கி மினி உதயம் என்று பெயர் வைக்கப்பட்டது. இப்படி ஒரே இடத்தில் நான்கு திரையரங்கங்களை கட்டி இருந்தார்கள்.
உதயம் காம்ப்ளக்ஸ்:
அந்த காலகட்டத்தில் உதயம் காம்ப்ளக்ஸ்க்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பிரபலமான நடிகர்களின் படங்கள் இந்த திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடி வசூல் சாதனையும் செய்திருந்தது.பின் 2000 களின் பிற்பகுதியில் சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமானபோது திரையரங்கு மீதான ஆர்வம் குறைய தொடங்கியது. இதனால் இந்த திரையரங்கம் பின் தங்க ஆரம்பித்தது. இருந்தாலும், தொடர்ச்சியாக இந்த திரையரங்கில் படங்கள் வெளியிடப்பட்டு தான் இருந்தது.
திரையரங்கின் தற்போதைய நிலை:
முன்பு இருந்தது போல் தற்போது இந்த திரையரங்களில் ரசிகர்கள் கலை கட்டவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே உதயம் காம்ப்ளக்ஸ் விற்கப்பட இருப்பதாகவும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த இடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திரையரங்குக்கு சம்பந்தப்பட்டவர் கூறி இருப்பது, உதயம் திரையரங்கை விற்று விட்டதாக வரும் செய்திகளெல்லாம் உண்மை கிடையாது.
திரையரங்கு உரிமையாளர் சொன்னது:
அதேபோல ஒரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. எதுவும் முடிவாகவில்லை. அதற்குள் திரையரங்கை விற்று இடிக்கப் போவதாக எல்லாம் செய்திகள் வந்துவிட்டது. உண்மையில் இப்போது வரை அந்த மாதிரி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. சில பிரச்சனை காரணமாக 2008 ஆம் ஆண்டு வரை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உதயம் திரையரங்கம் இயங்கிக் கொண்டிருந்தது. 2009 ஆண்டுக்கு பின் மீண்டும் உரிமையாளர்களிடமே உதயம் திரையரங்கம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பிறகு தான் இப்படி செய்திகள் வருகிறது. சமீபத்தில் கூட வெளிவந்த லால் சலாம், சைரன் போன்ற படங்கள் உதயம் திரையரங்களில் போடப்பட்டது என்று கூறியிருக்கிறார்.