சனாதனம் குறித்து நான் பேசியதை பாஜகவினர் திரித்து பேசுவதாக உதியநிதி ஸ்டாலின் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரங்கள் மிகவும் பரப்பரப்பாக இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் அவர்களுடைய கருத்து கூற அதற்க்கு எதிரணியில் இருப்பவர் மற்றொரு கருத்தை கூற என பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

உதயநிதி பேசியது:

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.

Advertisement

அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறோம். இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். அது சர்ச்சையான நிலையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

உதயநிதி விளக்கம்:

அமைச்சர் உதயநிதி பேசிய சமாதான அமைப்பு குறித்து அனுப்ப நிலையில் தான் எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை என்று அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். பிறப்புக்கும் எல்லாம் உயிர்க்கும் என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம் என்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர்  பதிவேற்றி இருந்தார். அந்த அறிவிப்பில் அவர் கூறியது என்னவென்றால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மாநாட்டில் நான் கலந்து கொண்டு பேசினேன். அதில் நான் பேசியதை சில பிரித்து இனப்படுகொலை செய்ய தூண்டினென கூறி மக்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளும் ஆயுதங்களாக நினைக்கின்றனர் பாஜகவை சேர்ந்தவர்கள்.

Advertisement

இதில் ஆச்சரியம் என்னவென்று பார்த்தால் மத்திய அமைச்சர் அவையில் இருப்பவர்களும் பாஜக முதல்வராக இருப்பவர்களும் என பலரும் எந்த அவதூரை என் மீது பரப்பி என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மரியாதைக்குரிய பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள்தான் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நாங்கள் தான் அவர்களுக்கு மீது வழக்கு தொடுக்க வேண்டும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து இருக்க வேண்டும். நாங்கள் எந்த மஜத்திற்கும் எதிரிகள் அல்ல என்பதை அனைவரும் அறிவர் பிறப்புக்கும் எல்லாம் உயிர்க்கும் என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கின்றோம் என்று தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement