அந்த படத்தை பாத்துட்டு எனக்கு சிரிப்பே வரல – இத பண்ண சொன்னேன், Sk கேட்கல – தான் வெளியிட்ட படத்தையே கேலி செய்த உதயநிதி.

0
223
don
- Advertisement -

சிவகார்த்திகேயன் படங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்திருக்கும் பேட்டி தற்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் இவர் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக களம் இறங்கி இருந்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து உதயநிதி பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், படத்தில் முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

உதயநிதி நடிக்கும் படங்கள்:

நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதனை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படம் ‘கலகத தலைவன்’. இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் நிதி அகர்வால் நடிக்கிறார். அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. கடந்த வாரம் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படம் வருகிற 18-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

உதயநிதி அளித்த பேட்டி:

இந்நிலையில் சிவகார்த்திகேயன் படங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்து இருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், முதலில் டான் படத்தை பார்க்க சொல்லிக் கொடுத்திருந்தார்கள். எங்களுக்கு கடைசி 20 நிமிடம் தான் பிடித்திருந்தது. காலேஜ் காமெடிகள் எல்லாம் பிடிக்கவில்லை. அதில் பெரிதாக காமெடியே இல்லை. அதனால் கொஞ்சம் ட்ரிம் பண்ணி விடுங்கள் என்று நான் சிவாவிடம் சொன்னேன். பின் அவர் வேற மாதிரி செய்து கொடுத்தார்.

-விளம்பரம்-

சிவா படங்கள் குறித்து சொன்னது:

நான் ட்ரிம் பண்ண சொன்னால், ஏன் பெரிதாகி விட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லை சார் இது நன்றாக வரும் என்று சொன்னார். நானும் நம்பிக்கை இல்லாமல் தான் படத்தை வெளியிட்டேன். பின் தியேட்டரில் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. சிவா படத்திலேயே எனக்கு டான் படம் ரொம்ப பிடிக்கும். அதே போல் நிறைய சிவகார்த்திகேயன் படத்தை நான் வேணாம் என்று சொல்லி இருக்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னும் நிறைய சூப்பர் ஹிட் படங்களை நான் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி உதயநிதி அளித்த பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சிவாவை கலாய்த்து வருகின்றனர்.

டான் படம்:

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

Advertisement