இந்திய எதிர்த்தும் இந்தி படங்களை ரிலீஸ் செய்வது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்.

0
156
Udhay
- Advertisement -

கடந்த வார துவக்கத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பில் தயாராகி உள்ள படம் தான் லால் சிங் சாத்தா. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்ததை தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் தவிர்த்து விடுங்கள் என்று சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் அது மட்டும் இல்லாமல் இது வைரல் ஆகியது இன்னும் பல சர்ச்சை கிளப்பியது. இதற்கு காரணம் 2015 ஆம் ஆண்டு அமீர் கான் கொடுத்த பேட்டி ஒன்றை காரணம் அதில் அமீர்கான் தன் மனைவி இங்கு இருப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகமாக உள்ளது அதனால் வேறு நாட்டிற்கு செல்லலாம் என்று வருத்தத்துடன் கூறியதாக செய்தியாளர் சந்திப்பில் அமீர்கான் தெரிவித்தார். இதனால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரீலிஸ் ஆகும் லால் சிங் சாத்தா படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

-விளம்பரம்-

சத்யம் திரையரங்கில் நிகழ்ச்சி :-

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்குகில் உதயநிதி ஸ்டாலின், அமீர்கான், நாக சைதன்யா மற்றும் லால் சிங் சாத்தா படத்தின் இயக்குனர் அத்வைத் சந்தன் போன்றவர்கள் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தி மற்றும் தமிழில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் வயோகாம் 18 ஸ்டுடியோவும் இணைந்து வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமீர்கான், படத்தின் இயக்குனர், உதயநிதி ஸ்டாலின் பேசினார்கள்.

- Advertisement -

இந்தி படமா வேன்டாம் என்ற உதயநிதி :-

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியில் பேசியது என்னவென்றால் அமீர்கானின் லால் சிங் சாத்தா படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது. தமிழ்நாட்டில் இந்து திணிப்பிற்கு எதிராக சூழல் நிலவி வரும் நேரத்தில் ஐயோ இந்தி படமா வேண்டாம் என்றேன். உடனே அமீர்கான் என்னை தொடர்பு கொண்டு அதுவும் வீடியோ காலிலேயே என்னை தொடர்பு கொண்டு இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என என்னிடம் கேட்டார் நானும் யோசிக்காமல் சரி ஓகே என்று சொல்லி விட்டேன்.

இந்தியை எதிர்க்கவில்லை இந்தி தினிப்பதை தான் எதிர்க்கிறோம் :-

தொடர்ந்து பேசிய அமீர்கான் என்னிடம் இந்திய எதிர்பவர்கள் ஹிந்தி படங்களை பார்ப்பார்களா எனிடம் கேள்வி எழுப்பினார் அதற்கு உதயநிதி ஸ்டாலின் நாங்கள் இந்தியை பொழுதும் எதிர்க்கவில்லை ஹிந்தியை திணிப்பதை மட்டும் தான் எதிர்க்கிறோம் இந்தியை கற்றுக்கொள்வதில் பிரச்சனை இல்லை அது எங்களுக்கு தேவை என்றால் நிச்சயமாக கற்றுக் கொள்வோம். நானும் உங்கள் ரசிகன் தான் ஒரு ரசிகனாக இந்த படத்தை வெளீயிடுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். படம் நன்றாக உள்ளது கண்டிப்பாக மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசினார்.

-விளம்பரம்-

அமீர் கான் உரை :-

அதன் பின்பு பேசிய அமீர்கான் முதலில் இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து சேர்ந்ததற்கு என்னை மன்னியுங்கள் என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன் உரையை ஆரம்பித்தார். இந்த படம் 14 வருடங்களுக்கு முன்பு அதுல் கதைய எழுதினார் இந்த படத்தின் கதைக்களம் எனக்கு பிடித்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இது ஒரு கிளாசிக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் எங்களுக்கு பல நினைவுகளை தந்த படமாக உள்ளது முற்றிலும் வித்தியாசமான கோணத்திலும் பல கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு கதாபாத்திரத்தின் கதையாக இருக்கும். இந்த படத்தை தமிழ்நாட்டில் ரீலிஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் உங்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் இந்த படத்தை நீங்கள் தான் மற்றவர்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனவும் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அமீர் கானின் உரை.

Advertisement