‘இப்படிக்கு தி.மு.க தொண்டன்’ தன் பட போஸ்டரில் வார்த்தைகளில் விளையாடும் பார்த்திபன் – வைரலாகும் போஸ்டர்.

0
205
- Advertisement -

இரவின் நிழல் படத்தின் அடுத்த பாடல் குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டு திகழ்கிறார். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
Compliant Against Parthiban

கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து இருந்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும், நடித்தும் இருந்தார்.

- Advertisement -

ஒத்த செருப்பு சைஸ் 7 படம்:

இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருந்தார். இதற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய விருதும், சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருதும் பார்த்திபனுக்கு கிடைத்திருந்தது. அதோடு ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் அபிஷேக்பச்சனை வைத்து பார்த்திபன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Actor And Director Parthiban Next Attempt After Otha Seruppu

இரவின் நிழல் படம்:

இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது.

-விளம்பரம்-

இரவில் நிழல் படத்தின் பாடல்,டீசர்:

தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்த மார்ச் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பார்த்திபன் போட்ட போஸ்ட்:

இந்த நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை பார்த்திபன் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பார்த்திபன் கூறியிருப்பது, அடுத்த.. அடுத்த.. அடுத்த.. லிரிக் வீடியோவை சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவார். இப்படிக்கு திமுக(திரைப்பட முன்னேற்ற கழக) தொண்டன் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டுள்ள போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement