‘அப்பா இங்க பாரு’ கையை மடக்கி Arms காட்டிய மகன், வியந்து பார்த்த உதயநிதி. என்ன இப்படி Fit ஆகிட்டாரு.

0
1579
inbanudayanidhi
- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

-விளம்பரம்-

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அர்ஜுன் சார்.

உதயநிதி மகன் இன்பநிதி :

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணெற்ற நலத்திட்டங்களை செய்து அசத்தி வருகிறார். அவரது மகனோ ஸ்போர்ட்ஸ்ஸில் அசத்தி வருகிறார்.

-விளம்பரம்-

கால்பந்து அணியில் தேர்வு :

உதயநிதியின் மகன், ஒரு கால்பந்து வீரர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகி இருந்தார்.இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இது குறித்து பேசிய இன்பன் உதயநிதி என்னுடைய இந்த முடிவிற்கு என்னுடைய குடும்பத்திலிருந்து மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.

கால்பந்தில் அசத்தும் இன்பா :

இந்த தேர்வு என்னுடைய தன்னம்பிக்கையை உயர்த்தி இருக்கிறது. என்னுடைய கால்பந்து விளையாட்டு கனவு குறித்து என்னுடைய தாத்தாவிடம் நான் பேசவில்லை. அவருக்கு இருக்கும் வேலை பளுவால் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே நாங்கள் சந்திக்கிறோம் என்று கூறியிருந்தார். நெரோகா எஃப்சி கிளப்பில் தேர்வான இன்பன் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு உடல் தகுதி மிக அவசியம்.

இன்பநிதியின் பிட்னஸ் :

அதிலும் கால் பந்து வீரர்களுக்கு பிட்னஸ் என்பது முக முக்கியமான ஒன்று. அதை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார் இன்ப நிதி. இப்படி ஒரு நிலையில் தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனது கையை தூக்கி தனது ஆர்ம்ஸ்ஸை மடக்கி காட்டி இருக்கும் இன்ப நிதியை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு இருக்கிறார் உதயநிதி. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement