ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அர்ஜுன் சார்.

0
746
sibbu
- Advertisement -

ரோஜா சீரியல் இருந்து அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபு சூரியன் திடீரென விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை.

-விளம்பரம்-

டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த சீரியல் தான் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது. இதனால் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : அச்சு அசலாக தளபதி விஜய் – பூஜா ஹேக்டே போல நடனமாடிய அரபிக் குத்து பாடலை ரீ – கிரியேட் செய்த ரசிகர்.

ரோஜா சீரியல்:

மேலும், 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த தொடரில் வில்லியாக ஷாமிலி நடித்து இருந்தார். பின் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதில் தற்போது வில்லி அனு என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய சிபு சூர்யன்:

இந்தநிலையில் ரோஜா சீரியல் இருந்து சிபு சூர்யன் திடீரென விகுவதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். சிபு சூரியன் விலகுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருந்தது. இது தொடர்பாக அவர்தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தது என்னவெனில், நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, புரோடக்சன் டீம் அனுமதியுடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்.

சிபு சூர்யன் போட்ட பதிவு:

குட்-பை சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என் மனதிற்கு நெருக்கமான தொடர்பு மற்றும் அன்பிற்கு நன்றி. புது பிராஜெக்ட் உடன் உங்களை என்டர்டைன் செய்கிறேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் எனக்கு தேவை என்று பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்த பதிவை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் பலர் சீரியலை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மீண்டும் வந்த சிபு :

இப்படி ஒரு நிலையில் தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் தொடருவதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களிடம் இருந்து ஏராளமான போன் கால்கள், போஸ்ட்கள், மெசேஜ்கள், கோரிக்கைகள் என தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. என் மீது நீங்கள் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு நன்றி. உங்களின் அனைவரின் கோரிக்கையை ஏற்று ரோஜா சீரியலில் உங்களின் ஃபேவரைட் அர்ஜுன் சாராக தொடருவது பற்றிய யோசிக்கிறேன். சீரியலில் விலகும் முடிவையும் மறு பரிசீலனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement