’10 வருஷத்துக்கு அப்புறமும் அதே ஆப்ஷன் தான்’ – உதயநிதியின் பழைய டீவீட்டை பகிர்ந்த அவரின் மனைவி கிருத்திகா.

0
568
udhay
- Advertisement -

பல வருடங்களுக்கு முன்பு ட்விட்டரில் உதயநிதி ஸ்டாலினும், அவருடைய மனைவி கிருத்திகாவும் பேசிக்கொண்ட பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் இவர் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக களம் இறங்கி இருந்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து உதயநிதி பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி.

- Advertisement -

நெஞ்சுக்கு நீதி:

இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், படத்தில் முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படம் ‘கலகத தலைவன்’. இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.

கலகத் தலைவன் படம்:

அருண் விஜய் நடித்த தடையற தாக்க, ஆர்யா நடித்த மீகாமன் போன்ற படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. இவர் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது உதயநிதியை வைத்து ‘கலக தலைவன்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிதி அகர்வால் நடிக்கிறார். அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

கிருத்திகா குறித்த தகவல்:

இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. கடந்த வாரம் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படம் வருகிற 18-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினும், அவருடைய மனைவியும் ட்விட்டரில் பேசிக்கொண்ட பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருத்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே. கிருத்திகா தமிழ் சினிமாவில் பிரபலமான பெண் இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.

உதயநிதி- கிருத்திகா டீவ்ட்:

இவர் வணக்கம் சென்னை, காளி போன்ற பட படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய பேப்பர் ராக்கெட் என்ற வலைத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உதயநிதி உரையாடி இருந்தார். அப்போது டின்னருக்கு என்ன வேண்டும்? என கிருத்திகா கேட்டு இருக்கிறார். அதோடு அவர், ஏ) தோசை, (பி) தோசை, (சி) தோசை, (டி) தோசை என்று ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறார். அதனை இப்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். இதை பார்த்த கிருத்திகா உதயநிதி, 10 வருடங்கள் கழித்தும் அதே ஆப்ஷன்கள் தான் என்று வேடிக்கையாக பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement