ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார். திமுக சார்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வண்ணம் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் அவருக்கு கட்சி பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றது பலரால் விமர்சிக்கபட்டு வந்தது. இப்படி ஒரு சூழலில் உதயநிதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.

இதையும் பாருங்க : ஹீரோயின் நீயா நானா.! மேடையில் இருந்து பாதியில் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.

Advertisement

அது என்னவெனில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இறுதியாக வெளியான ‘கண்ணே கலைமானே’ படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற உள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி மற்றும் தமன்னா நடித்த இந்த படம் சமீபத்தில் வெளியானது.

ஒரு விவசாயம் மற்றும் குடும்ப பிரச்சனை கலந்த படமாக எடுக்கபட்ட இந்த படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலமாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்த இந்தப் படத்தில், வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Advertisement

இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் விருதினை பெற உள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சீனு ராமசாமி’ தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது.என்று மகிழ்ச்சியுடம் குறிப்பிடுள்ளார்.

Advertisement
Advertisement