தவெக மாநாடு பற்றிய கேள்விக்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருக்கும் பதில் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். விஜயின் நடிப்பில் கடைசியாக ‘கோட்’ படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக இப்படம் ஹிட் அடித்து விட்டது என்று கூறப்படுகிறது. அரசியலில் களமிறங்குவதால் விஜய் இன்னும் ஒரே ஒரு படம் ‘தளபதி’ 69மட்டும்தான் நடிக்க இருக்கிறார்.
‘இந்த படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தை கேவிஎன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே இப்படத்தின் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. இது கடைசி படம் என்பதால், படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என்பதில் நடிகர் விஜய் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க, கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.
தவெக கட்சி:
அதோடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்று இருந்தார். கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார். அந்தக் கொடியில் வாகை மலரும், இரு பக்கம் யானை படமும் இடம்பெற்று இருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சிக்கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
மாநாடு குறித்த தகவல்:
தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் புஸ்ஸி ஆனந்த் பார்த்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டிஎஸ்பி இடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்து இருந்தார். பல தடைகளுக்கு பின் மாநாட்டிற்கான அனுமதி கிடைத்தது. இதில் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் உள்ள வி.சாலையில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெற இருக்கிறது.
மாநாட்டின் பந்தக்கால் விழா:
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தான், தவெக மாநாட்டின் பந்தக் கால் நடும் விழா நடைபெற்றிருந்தது. இந்த விழா கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் ஆகிய அனைத்து மதங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து பூஜை நடத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சில காலம் கருத்து வேறுபாடு இருந்தது நான் அறிந்ததே. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவெக கொடி அறிமுக விழாவில் கூட எஸ்.ஏ.சி யும் சோபாவும் கலந்து கொண்டு விஜய்யை வாழ்த்தி இருந்தார்கள்.
மாநாடு குறித்து எஸ்.ஏ.சி :
இந்த நிலையில் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மீண்டும் பிரச்சனை என்று பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. அதாவது,சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் விஜய் கட்சியின் மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘மாநாடு எடுத்தவர் இவர்தான். எனவே இவரிடம் கேளுங்கள்’ என்று அங்கு இருந்த வெங்கட் பிரபுவை கைகாட்டிநழுவி விட்டார். இதனால், தன் மகனின் மாநாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எஸ்.ஏ .சி இது போல் பதில் அளித்ததால், மீண்டும் விஜய்க்கும் எஸ்.ஏ .சிக்கும் பிரச்சனை ஆரம்பித்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது.