தமிழில் 2007இல் வெளியான மறைந்த இயங்குனர் ஜீவா எடுத்த படம் உன்னாலே உன்னாலே. இந்த படத்தில் நடிகர் வினைய்க்கு ஜோடியாக சதா நடித்திருப்பார்.மற்றொரு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை தனிஷா முகர்ஜி.பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தங்கையான இவர் 1978 இல் மும்பையில் பிறந்தார்.
பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ,சுனில் ஷெட்டி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அப்படி இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராததால் முன்னணி ஹீரோயின்கள் மத்தியில் இவரால் ஜொலிக்கமுடியவில்லை.
பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் நிஷா சின்னத்திரைக்கு தாவினர். இவர் 2013 இல் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் 2ஆம் பரிசையும் வென்றார் நிஷா.அதே நிகழ்ச்சியில் பங்குபெற்ற 47 வயதாகும் அர்மீன் கோலியை காதலித்து வந்தாக பல தகவல்கள் வெளியாகின.
பின்னர் இவர்கள் இருவரும் 2014 இல் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இன்னும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது என்டெர்ட்டைன்மன்ட் ஈ என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.