‘தம்பி போய் ஒழுங்கா விளையாடு’ – ரிஷப் பண்டை ஏளனம் செய்த லெஜெண்ட் நாயகி. திட்டி தீர்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள்.

0
229
urvashi
- Advertisement -

தி லெஜன்ட் பட நாயகி ஊர்வசி ரவுடேலா ஹரித்வாரில் 25 பிப்ரவரி 1994 அன்று கர்வாலி ராஜ்புத் குடும்பத்தில் மீரா ரவுடேலா மற்றும் மன்வர் சிங் ரவுடேலா ஆகியோருக்குப் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோட்வார். ரவுடேலா டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.15 வயதில் வில்ஸ் லைஃப்ஸ்டைல் ​​இந்தியா ஃபேஷன் வீக்கில் ரவுடேலா தனது முதல் பெரிய இளவரசி பட்டதை பெற்றார். அவர் மிஸ் டீன் இந்தியா 2009 என்ற பட்டத்தையும் வென்றார். அவர் லக்மே ஃபேஷன் வீக்கின் டீன் மாடலாக ஷோ ஸ்டாப்பராக இருந்தார் மேலும் அமேசான் ஃபேஷன் வீக், பாம்பே ஃபேஷன் வீக் மற்றும் துபாய் ஃபேஷன் வீக் ஆகியவற்றில் ராம்ப் வாக் செய்தார். 2011 இல், ரவுடேலா இந்திய இளவரசி 2011, மிஸ் டூரிசம் வேர்ல்ட் 2011, மற்றும் மிஸ் ஏசியன் சூப்பர்மாடல் 2011 ஆகியவற்றை வென்றார்.

-விளம்பரம்-

வயது குறைவு காரணாமாக கீரிடத்தை தவறவிட்ட ஊர்வசி :-

சீனாவில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டின் மிஸ் டூரிஸம் குயின் என்ற பட்டத்தையும் வென்றார் மற்றும் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். அவருக்கும் இஷாக்ஸாதே வழங்கப்பட்டது, ஆனால் அவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கவனம் செலுத்த விரும்பியதால் அதை நிராகரித்தார். 2012 ஆம் ஆண்டில், அவர்
I AM She – Miss Universe India மற்றும் மிஸ் ஃபோட்டோஜெனிக் என்ற சிறப்பு விருதை வென்றார். இருப்பினும், அந்த நேரத்தில் அவள் வயது குறைந்தவளாக இருந்ததால் அவள் தன் கிரீடத்தை கைவிட வேண்டியிருந்தது. 2015 இல், ரவுடேலா மீண்டும் இந்தியப் போட்டியில் இணைந்து பட்டத்தை வென்றார். மிஸ் யுனிவர்ஸ் 2015ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆனால் இடம் பெறவில்லை.

- Advertisement -

திரைபட வாய்ப்பு :-

சன்னி தியோலுக்கு ஜோடியாக சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ரவுடேலா. பின்பு தென்ந்திய படங்களில் பணியாற்றத் தொடங்கினார் மற்றும் கன்னடத்தில் மிஸ்டர் படத்தில் நடித்தார். படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், அவரது நடனக் காட்சி பாராட்டப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு எழுதும் சுனயனா சுரேஷ், “ஊர்வசி வெளிப்படைத்தன்மை கொண்டவர் மற்றும் அவர் தோன்றும் சில காட்சிகளிலும் பாடல்களிலும் குறிப்பாக நடனம் மூலம் தனது முத்திரையை பதிக்கிறார். பின்னர், அவர் சனம் ரே மற்றும் கிரேட் கிராண்ட் மஸ்தி ஆகிய இரண்டு இந்தி படங்களில் தோன்றினார், இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சராசரி வசூல் செய்தன. 2017 இல், காபில் திரைப்படத்தில் ஹசீனோ கா தீவானா என்ற சிறப்பு நடனக் காட்சியில் ரௌடேலா நடித்தார். அமிதாப் பச்சனின் நடிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார். அதுமட்டுமல்லாமல், பங்களாதேஷ் திரைப்படமான போரோபாஷினியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

ரிஷப் பண்ட்டை கலாய்த்த ஊர்வசி :-

தற்போது பொது லெஜன்ட் படம் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆகிய ஊர்வசி ரவுடேலா. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த அவர் தன்னை சந்திப்பதற்காக கிரிக்கெட் வீரர் ஒருவர் 12 மணி நேரத்திற்கு மேலாக என்னை சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் தூங்கி எழுந்து இப்போது அவரை சந்திக்க முடியாது மும்பை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்று சொன்னேன் என்று கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் பெயரை குறிப்பிடாமல் RP என்று மறைமுகமாக அவரைப் பற்றி கூறி பேட்டி கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

ஊர்வசியை திட்டி தீர்க்கும் ரிஷப் பண்ட் ரசிகர்கள் :-

இதனையோட்டி மற்றொரு பதிவில் தம்பி போய் பந்து விளையாடு என்று வடிவேலு தோனியில் கலாய்த்திருக்கிறார். இந்த பதிவு ரிஷப்மென்ட் ரசிகர்களே கோவத்தின் உச்சிக்கே கொண்டு போய் சேர்த்தது என்று சொல்லலாம்.அதன் பின்பு தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவா இருக்கும் ஊர்வசி தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடல்களை தொடர்ந்து வருவார். இப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது ஊர்வசியின் ஒரு ரசிகர் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு ஊர்வசி மறுபடியும் ரிஷப் பண்டே கலாய்க்கும் வகையில் தனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம்மே கிடையாது அதே சமயம் எந்த கிரிக்கெட் வீரரையும் தனக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ரிஷப் பண்ட் அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஊர்வசி ராவுட்டேலாவை கலாய்த்தும் திட்டிய தீர்த்தவாரு உள்ளனர். இந்த பதிவுகள் இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக வலம் வருகின்றனர்.

Advertisement